Skip to main content
உலகத்தைச் சுற்றிக்கொண்டே உயிர்களைக் காக்கும் தாதி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகத்தைச் சுற்றிக்கொண்டே உயிர்களைக் காக்கும் தாதி

வாசிப்புநேரம் -
ஒரு நாள் சீனாவில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒன்றுக்குச் சிகிச்சையளிப்பார்...

இன்னொரு நாள் ஜப்பானில் பனிச்சறுக்கு விபத்தில் சிக்கிய தம்பதிக்கு உதவுவார்...

தேவையுடையோருக்குச் சிகிச்சையளிக்க உலகத்தைச் சுற்றி வருகிறார் ஹேமா ராஜேந்திரா எனும் தாதி.

3 ஆண்டுகளாக விமானத் தாதியாகப் பணியாற்றும் அவர் உலகின் வெவ்வேறு பகுதிகளில் உதவி தேவைப்படுவோருக்கு விமானத்தில் சிகிச்சையளிப்பார்.

நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கும்வரை அவர்களைக் கவனிப்பார்.

"எனக்குப் பயணம் செய்யப் பிடிக்கும்..தாதிப் பணியும் பிடிக்கும்..விமானத் தாதியாக இருப்பது இரண்டு அம்சங்களிலும் திருப்தியளிக்கிறது," என்று ஹேமா சொன்னார்.

சிங்கப்பூரில் தாதியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள அவர் பள்ளிப் பருவத்திலேயே விமானத் தாதியாக இருக்கவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டார்.

ஆனால் விமானத் தாதியாவது எளிதல்ல.

அவசரச்சேவைப் பிரிவில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் இருக்கவேண்டும்...

இதயப் பிரச்சினைகள்...பச்சிளங்குழந்தைகள், பிள்ளைகள் ஆகியோரின் மருத்துவச் சிக்கல்களைக் கையாளத் தெரிந்திருக்கவேண்டும்...

ஹேமா முதலில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள மருத்துவமனையின் அவசரச் சேவைப் பிரிவில் அனுபவம் பெற்றார்.

வேலையில்லாத நேரத்தில் விமானத் தாதியாவதற்குத் தேவையான மற்ற திறன்களைக் கற்றுக்கொண்டார்.

"கடுமையான பயிற்சி தேவைப்பட்டது...ஆனால் விமானத் தாதியாக விரும்பினேன். அனைத்தையும் கடந்து சென்றேன்," என்று ஹேமா சொன்னார்.

இப்போது பலரின் உயிரைக் காப்பாற்றிக்கொண்டே உலகின் வெவ்வேறு இடங்களைச் சுற்றிவருகிறார் அவர்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்