Skip to main content
"இவ்வளவு பெரிய குழந்தையை எப்படிப் பெற்றெடுத்தேன்?"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

"இவ்வளவு பெரிய குழந்தையை எப்படிப் பெற்றெடுத்தேன்?"- அதிர்ச்சியில் தாய்

வாசிப்புநேரம் -
"இவ்வளவு பெரிய குழந்தையை எப்படிப் பெற்றெடுத்தேன்?"- அதிர்ச்சியில் தாய்

FB/St. Joseph's Hospital-South

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பொதுவாக பிறந்த குழுந்தையின் எடை சுமார் 6 பவுண்டு (2.7 கிலோகிராம்) இருக்கும்....

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓர் இன்ப அதிர்ச்சி...

St. Joseph’s மருத்துவமனையில் 13 பவுண்ட் (சுமார் 6 கிலோ) எடைகொண்ட குழந்தை பிறந்துள்ளது...

குழந்தையைப் பெற்ற டேனியலா ஹைன்ஸ் (Daniella Hines) அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

"இவ்வளவு பெரிய குழந்தையை எப்படிப் பெற்றெடுத்தேன்?'' என வாயடைத்துப் போனார் ஹைன்ஸ்.

இம்மாதம் 3ஆம் தேதி அனான் (Annan) பிறந்தான்.

குழந்தையைக் காட்டும் படங்களை மருத்துவமனை Facebookஇல் பதிவிட்டிருக்கிறது. குழந்தையை ஓர் அற்புதம் என்றும் அது வருணித்துள்ளது.

அங்குப் பிறந்த குழந்தைகளில் இதுவே ஆகப்பெரியதாக இருக்கலாம் என்றது மருத்துவமனை.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்