வாழ்வியல் செய்தியில் மட்டும்
நாட்டுப்புறக் கலைகளுக்குப் பேராதரவு தந்து ரசிக்கும் சிங்கப்பூர் மக்கள்- கலைஞர்கள் மகிழ்ச்சி
வாசிப்புநேரம் -
மண்வாசனை... ஒருவருடைய பூர்விக நாட்டின் மண் மணத்தைப் பிரதிபலிக்கும் தொடர்....

தொன்றுதொட்டு, காலம் காலமாய், தலைமுறை தலைமுறையாய், தொடர்ந்து நிலைத்திருக்கும் கலைகள், உணவு வகைகள், உறவுகள், மொழிக் கூறுகள் முதலியவற்றை உணரும்போது மண்வாசனை வீசும் என்று சிலர் உவமையாகச் சொல்வதைக் கேட்டிருப்போம்.

அந்த வரிசையில் பொங்கல் திருநாள்...
சூரியனுக்கும் உழவுத்தொழிலில் உதவும் கால்நடைகளுக்கும் முக்கியமாக உழவர்களுக்கும் நன்றி சொல்லும் பண்டிகை பொங்கல்...

அதை முன்னிட்டு சிங்கப்பூரில் பல பொங்கல் தொடர்பான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

லிட்டில் இந்தியாவில் "மண் வாசனை" எனும் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது....

அதில் வரும் முக்கிய அங்கங்களைச் 'செய்தி' காணொளியாகப் பதிவு செய்துள்ளது... உங்கள் பார்வைக்கு... கண்டு மகிழுங்கள்...