Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

காரணமில்லாக் கோபம், எரிச்சல்- உணவால் இருக்கலாம் என்று யோசித்ததுண்டா?

"போ போ, எனக்கு எல்லாம் தெரியும்!" 

வாசிப்புநேரம் -

போ போ, எனக்கு எல்லாம் தெரியும்!

என்னைத் தொந்தரவு செய்யாதே!

என ஒரு நாளில் பல முறை இத்தகைய சொற்றொடர்களை நாம் கேட்கிறோம்... நம்மில் சிலர் அவ்வாறு பேசியும் இருக்கலாம்.

காரணமே இல்லாமல் கோபம், எரிச்சல் போன்றவை ஏற்படுவது சாத்தியம் என்று அந்த நேரங்களில் சிலர் யோசித்தும் இருக்கலாம்.

ஆனால், அனைத்துக்கும் காரணம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். ஒருவர் உண்ணும் உணவால் உணர்வுகள் திசை திரும்பலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

உணவு, மனநலம் ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளும் போனி கப்லன், ஜூலியா ரக்லிஜ் (Bonnie Kaplan, Julia Rucklidge) ஆகிய இருவரும் "The Better Brain" எனும் நூலையும் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் சொல்வது பற்றி மேலும் தெரிந்துகொள்ள 'செய்தி' சத்துணவு நிபுணர் கார்த்திகா திருஞானத்திடம் பேசியது.

  • உணவு, ஒருவரின் உணர்வுகளைப் பாதிக்குமா?

♨ ஃபோலேட் (Folate)
♨ இரும்புச் சத்து (Iron)
♨ ஒமேகா-3 அமிலங்கள் (Long-chain omega-3 fatty acids - EPA, DHA)
♨ மெக்னீசியம் (Magnesium)
♨ பொட்டாசியம் (Potassium)
♨ செலினியம் (Selenium)
♨ தாயமின் (Thiamine)
♨ வைட்டமின் A (Vitamin A)
♨ வைட்டமின் B6 (Vitamin B6)
♨ வைட்டமின் B12 (Vitamin B12)
♨ வைட்டமின் C (Vitamin C)
♨ ஸிங்க் (Zinc)

  • எந்த உணவுவகைகளை உண்டால் ஒருவரின் உணர்வுகள் மேம்படும்?

♨ ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுவகைகள் (சில மீன்வகைகள், சியா, அல்லது ஆளி விதைகள்)

♨ Dark Chocolate எனும் சாக்லெட் வகை

♨ தயிர் போன்ற புளித்த (fermented) உணவுப் பொருள்கள்

♨ பெர்ரி வகைப் பழங்கள்

♨ வகைகள், விதைகள்

♨ காப்பி

  • உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய எந்தெந்த உணவுப் பழக்கங்களைத் தவிர்க்கவேண்டும்?

♨ Processed meat எனும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் அதிகமாக இருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

♨ அதிகக் கொழுப்புச் சத்துள்ள பால்வகை உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

♨ பெரிய அளவில் உருளைக்கிழங்கை உண்ண வேண்டாம்.

♨ நிறைய காய்கறி, பழங்களைச் சாப்பிட்டால் depression எனும் மனச்சோர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் எனச் சில ஆய்வுகள் காட்டுகின்றன.

♨ மாவுச் சத்து அதிகம் கொண்ட உணவுகளைத் தவிர்க்கலாம்
♨ சர்க்கரை அதிகமாக இருக்கும் சிற்றுண்டி வகைகள், இனிப்பு பானங்கள் ஆகியவற்றையும் அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

♨ மதுப் பழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

♨ நிறைய தண்ணீர் அருந்துங்கள்

பல்வேறு காரணங்களால் பலருக்கும் மனநலன் பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால் உணவால் உணர்வுகளும் பாதிப்படையலாம் என்பதால் நாம் உண்ணும் உணவை மிகுந்த அக்கறையுடன் தேர்ந்தெடுக்கவேண்டும்.

உணவும் உணர்வு என்றால்... தீய உணர்வுகள் வராமலிருக்க அதுவே தீர்வாகவும் மருந்தாகவும் அமையலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்