Skip to main content
உணவுக்கு இடையே இடைவெளி... ஆயுளைக் கூட்டும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

உணவுக்கு இடையே இடைவெளி... ஆயுளைக் கூட்டும்

வாசிப்புநேரம் -
உணவுக்கு இடையே இடைவெளி... ஆயுளைக் கூட்டும்

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உணவுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் புதிய ஆய்வு சொல்கிறது.

எந்நேரமும் எங்கும் உணவு கிடைக்கும் என்ற இன்றைய போக்கு காரணமாக இடைவிடாமல் உண்ணும் பழக்கம் தலைதூக்கிவிட்டது.

அது நல்லதல்ல என்கிறது ஓர் ஆய்வு.

மனிதர்கள் விழித்திருக்கும் சுமார் 16 மணி நேரமும் ஏதாவது ஒன்றைக் கொறித்துக்கொண்டே இருப்பதாக ஆய்வு சொல்கிறது.

Buck Institute for Research on Aging அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அமைப்பின் ஆய்வாளர் அதனை விளக்கினார்.

சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை சேர்கிறது. அதைக் கையாள உடனடியாக இன்சூலின் சுரக்கிறது. எந்நேரமும் இன்சூலின் சுரப்பதால் அணுக்கள் அளவுக்கு அதிகமாக வளர்கின்றன. இதனால் தீங்கு ஏற்படுகிறது.

புற்றுநோய் ஏற்படவும், வளர்ச்சியைச் சேதப்படுத்தக் கூடிய கொழுப்பு உருவாகவும் சாத்தியம் ஏற்படுகிறது.

இதற்கு என்னதான் தீர்வு?

ஓய்வு கொடுக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உணவுக்கு இடையே இடைவெளி தேவை.

பன்னிரண்டு மணி நேரம் உண்பது பன்னிரண்டு மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது என்பதைப் பின்பற்றினால் அதுவே உடலுக்கு நல்லது.

ஆயுளுக்கும் அதுவே சிறந்தது என்கிறது ஆய்வு.

ஆதாரம் : Others/The Guardian

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்