Skip to main content
ஜனவரி 13 புத்தாண்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஜனவரி 13 புத்தாண்டு - வித்தியாசமான தீவு

வாசிப்புநேரம் -
ஜனவரி 13 புத்தாண்டு - வித்தியாசமான தீவு

Avex Asia

உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து 2 வாரங்கள் ஆகிவிட்டன.

ஆனால், அதற்கு விதிவிலக்காக இன்று (13 ஜனவரி) புத்தாண்டை வரவேற்கிறது ஸ்காட்லந்தின் (Scotland) ஃபிலா (Foula) தீவு.

அந்தத் தீவில் கிறிஸ்துமஸ் தினம் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாப்படுகிறது.

40 பேருக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட அந்தத் தீவில் பழங்கால ஜுலியன் (Julian) நாள்காட்டி முறையின்படி கிறஸ்துமஸும் புத்தாண்டும் இன்று வரையில் அனுசரிக்கப்படுவதாக BBC தெரிவித்தது.

விவசாயம், தோட்ட வேலை, மீன்பிடித்தொழில் போன்ற வேலைகளைச் செய்யும் தீவு மக்கள் நவீனமாக மாறிவிட்ட உலகில் பழைய வழக்கங்களைக் கட்டிக் காப்பாற்றுவது முக்கியம் என்று கருதிகின்றனர்.

"ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டையும் கிறிஸ்துமஸையும் இரு முறை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார் ஃபிலா தீவு வாசி ஒருவர்.
ஆதாரம் : Others/BBC

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்