நன்னீரில் வாழும் உயிரினங்கள் சில அழிந்துபோகும் நிலையில்
உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் நன்னீரில் வாழும் சுமார் 23,000 வகை உயிரினங்களில் கால்வாசி அழிந்துபோகும் நிலையில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சிலவகைப் பூச்சிகளும் மீன்களும் அதிக ஆபத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நீரின் இயற்கை அம்சங்களால் மிரட்டல் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மாறுகிறது.
அவ்வாறு இடம் மாறும் உயிரினங்களும் அவற்றின் வசிப்பிடங்களும் அதில் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான உயிரினங்களுக்கு நன்னீர்ச் சூழல் மிக முக்கியம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தூய்மைக்கேடு, நீரை வெளியேற்றுதல், அதிகப்படியான அறுவடை போன்ற காரணங்களால் பல்லுயிர்ச்சூழல் பாதிக்கப்படுகிறது.