Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நாவூறும் பொரித்த கோழி...பல்வேறு வழிகளில்...உலகெங்கும்!

வாசிப்புநேரம் -

வாட்டிய கோழி...பிரட்டிய கோழி.... என்று கோழி உணவில் எத்தனையோ வகைகள்...அனைத்தும் சுவைதான்!

குறிப்பாகப் பொரித்த கோழி.... நம்மில் பலருக்கு நாவூறச் செய்யலாம்...

பொரித்த கோழியைக் கொண்டாடுவதற்கு ஒரு நாளே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுதான் இன்று (6 ஜூலை), அனைத்துலகப் பொரித்த கோழி நாள்!

உலகெங்கும் பொரித்த கோழி பல்வேறு வழிகளில் பரிமாறப்படுவதுண்டு.

சில வழிகள் இதோ!

தென்கொரியா - Yangnyeom கோழி

Unsplash/Tyson

இருமுறை பொரிக்கப்படுவதே கோழியின் சிறப்பு.

சாய் சாஸ், இஞ்சி, சர்க்கரை, தேன் போன்றவற்றைக்கொண்டு ஊற வைக்கப்படும் கோழி பொரிக்கப்படுகிறது.

பொரிக்கப்பட்ட கோழி மீண்டும் அதே முறையில் பிரட்டப்படும். பின்னர் அது பொரிக்கப்படும்.

அதனால் கோழி மிகவும் முறுகலான தன்மையைப் பெறும்! இனிப்பும் காரமும் கலந்த சுவை இருக்கும்...

ஜப்பான் - Karaage கோழி

Wikimedia Commons

எலும்பில்லாத கோழியின் தொடைப் பகுதிகளைக் கொண்டு Karaage செய்யப்படுகிறது.

தோல் அகற்றப்படாத கோழித் துண்டுகள், இஞ்சி, பூண்டு, சாய் சாஸ், sake எனும் ஜப்பானிய மதுபானம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படுகின்றன. 

அவை பின்னர் Potato starch எனப்படும் உருளைக்கிழங்கு மாவில் தொட்டுப் பொரிக்கப்படுகின்றன.

ஆஸ்திரியா - schnitzel கோழி

Pixabay

கோழி மெலிதாக இருப்பதே schnitzel-இன் சிறப்பு. கோழித் துண்டுகளை மெலிதாக்குவதற்கு அதன் இறைச்சி அடிக்கப்படுவதுண்டு .
 
மாவு, ரொட்டித்தூள், உப்பு, மிளகு ஆகியவற்றுடன் ஊறவைக்கப்படும் கோழி பின்னர் பொரிக்கப்படுகிறது.

செனகல் (Senegal) - Yassa poulet

Unsplash/Louis Hansel

கோழிக்கு வெங்காயம் பெருமளவில் சேர்க்கப்படுவதே சமையலின் சிறப்பு.

கடலை எண்ணெய், எலும்பிச்சைச் சாறு, Apple cider vinegar, வெங்காயம், கடுகு ஆகியவற்றில் கோழி 24 மணிநேரம் ஊறவைக்கப்படுகிறது.

அது பின்னர் பொரிக்கப்படுகிறது. 

தாளிக்கப்பட்ட வெங்காயத்துடன் கோழியும் அதை ஊறவைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களும் சிறிது நேரம் சமைக்கப்படுகின்றன.

அமெரிக்கா -  நெஷ்வில் (Nashville) Hot கோழி

Wikimedia Commons

காரமே கோழியின் சிறப்பு.

மோரில் தொட்டு, மாவில் பிரட்டப்படும் கோழி பொரிக்கப்படுவதுண்டு. அது பின்னர் cayenne, Habanero ஆகியவை கலந்த எண்ணெயில் பிரட்டப்படுகிறது.

கோழியிலுள்ள சூட்டைத் தணிப்பதற்கு அது வெள்ளை ரொட்டிமீது வைத்துப் பரிமாறப்படுவதுண்டு.

இவற்றில் உங்களுக்குப் பிடித்த பொரித்த கோழி எது?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்