மூன்றாக மடங்கும் திறன்பேசி - Samsung அறிமுகம்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Samsung நிறுவனம் முதல்முறையாக மூன்றாக மடங்கக்கூடிய திறன்பேசியை அறிமுகம் செய்துள்ளது.
Galaxy Z TriFold எனும் அந்தத் திறன்பேசியின் விற்பனை இம்மாதம் (டிசம்பர்) 12ஆம் தேதி தொடங்கும்.
திறன்பேசியை விரித்தால் 25.4 செண்டிமீட்டர் அளவிலான திரை கிடைக்கும்.
அது வேலைக்கு உகந்தது என்று Samsung நிறுவனம் தெரிவித்தது.
திறன்பேசியின் எடை 309 கிராம்.
அதன் விலை? சுமார் 2,440 டாலர்.
புதிய iPhone 17 திறன்பேசியின் விலையைவிட அது இரு மடங்கு அதிகம்.
அதன் புதிய திறன்பேசி அனைவருக்குமானது அல்ல என்று Samsung கூறியது.
அது ஒரு சிறப்புப் பதிப்பு என்று தெரிவிக்கப்பட்டது.
மூன்றாக மடங்கக்கூடிய திறன்பேசியை ஏற்கனவே சீனாவின் Huawei நிறுவனம் சென்ற ஆண்டு (2024) அறிமுகம் செய்துவிட்டது.
அதன் விலையும் மிக அதிகம்.
Apple நிறுவனமும் மடக்கக்கூடிய திறன்பேசியை வெளியிடத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
போட்டிமிக்க திறன்பேசிச் சந்தையில் தனித்து நிற்க நிறுவனங்கள் பல புதுமையான வழிகளை நாடுகின்றன.

ஆதாரம் : AFP