Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

வயிற்று வலியா? நெஞ்சு எரிச்சலா? Gastritis - இரைப்பை அழற்சியாக இருக்கலாம்...

வாசிப்புநேரம் -

வயிற்று வலியா? உணவு உட்கொண்டபின் உடனடியாக வயிறு உப்பியதுபோல் தெரிகிறதா? 

அது Gastritis என்ற இரைப்பை அழற்சிக்கான அறிகுறிகளாக இருக்கலாம். 

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை வெளியிட்ட தகவலின்படி சிங்கப்பூரில் குறிப்பாக 65 வயதைத் தாண்டிய மூத்தவர்களில் அது 71 விழுக்காட்டினரைப் பாதிக்கிறது.

இரைப்பை அழற்சியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள 'செய்தி' இரைப்பை நிபுணர் டாக்டர் ரவிஷங்கர் அசோக்குமாரிடமும் பொது மருத்துவர் டாக்டர் பைசாலிடமும் பேசியது.  

(படம்: Pixabay)

வயிற்றுப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை நாடி எல்லா வயதினரும் பொது மருத்துவர்களிடம் செல்வது வழக்கம்

என்கிறார் டாக்டர் பைசால். 

இருப்பினும் நோயாளிகளில் பலரும் மற்ற வயிற்றுப் பிரச்சினைகளை இரைப்பை அழற்சியாகத் தவறாக வகைசெய்வதுண்டு எனச் சொன்னார் டாக்டர் ரவி. 

இரைப்பை அழற்சிக்கான சில பொதுவான அறிகுறிகள்: 

  • வயிறு உப்புவது
  • வயிற்றுவலி 
  • வாந்தி எடுப்பது
  • நெஞ்சில் எரிச்சல் போன்ற உணர்வு
  • சாப்பிட்டபின் வயிறு பெரிய அளவில் நிறைந்தது போன்ற உணர்வு 

அதுபோன்ற அறிகுறிகள் அடிக்கடி இருந்தால் அவதியுறுபவர் மருத்துவரைக் காணச் செல்வது நல்லது. 

(படம்: Pexels/Daniel Reche)

இரைப்பை அழற்சிக்கான அறிகுறிகள் ஏற்படுவதை எப்படித் தவிர்ப்பது? 

முதலில் அது எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறியவேண்டும் என்கிறார் டாக்டர் ரவி. 

  • உணவு
  • வாழ்க்கைமுறை
  • கிருமித்தொற்று
  • மருந்துகளின் பக்கவிளைவுகள்
  • மனச்சோர்வு

போன்ற காரணங்களால் இரைப்பை அழற்சியின் அறிகுறிகள் தென்படும் வாய்ப்புகள் அதிகம். 

சில நேரங்களில் அறிகுறிகள் கடுமையாக இல்லாவிட்டால் சிலர் தாமாகவே மருந்துகளை உட்கொண்டு அதைத் தீர்க்க முயல்வர் என்பதைச் சுட்டினார் டாக்டர் பைசால். 

ஆனால் வயிற்றுக்கட்டி போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்குப் பெரிய அளவிலான அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். அத்தகைய பிரச்சினைகளைத் தனிநபர் கண்டறிவது கடினம் என்பதால் மருத்துவர்களை நாடுவது முக்கியம் என்று டாக்டர் பைசால் ஆலோசனை வழங்குகிறார். 

(படம்: Pixabay)

இரைப்பை அழற்சியைத் தவிர்ப்பதற்கான வழி?

"உணவே மருந்து"

  • சரியான நேரங்களில் உணவை உட்கொள்ளவேண்டும்
  • தாமதமாக இரவு உணவை உண்ணக்கூடாது
  • மிகக் காரமான உணவை உட்கொள்வதைத் தவிர்க்கவேண்டும்
  • Carbonated வகை பானங்களை அதிகமாகக் குடிக்கவேண்டாம்
  • எண்ணெயில் பொறித்த, அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுவகைகளைத் தவிர்க்கவும்

சில சுகாதாரமான உணவுத் தெரிவுகளையும் சுகாதாரமான பழக்கங்களையும் பின்பற்றினால் இரைப்பை அழற்சியை ஓரளவுக்குத் தவிர்க்கலாம். 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்