சமூக வலைத்தளங்களில் பரவும் 6-7.. குழம்பிப்போன Gen Zs....
AFP
This audio is generated by an AI tool.
அண்மையில் '6-7' சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
Gen Alpha தலைமுறையினர் 6-7ஐ அதிகம் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு முந்தைய Gen Z தலைமுறையினரில் பலர் அதனைக் கேள்விப்பட்டதில்லை என்கின்றனர்.
6-7 என்றால் என்ன?
அதற்கு அர்த்தமே இல்லையாம்!
2024ஆம் ஆண்டில் வெளியான Doot Doot பாடலில் “6-7, I just bipped right on the highway,” எனும் வரிகள் இடம்பெற்றிருந்தன. அது அமெரிக்காவின் சிக்காகோவில் உள்ள 67ஆவது தெருவைக் கோடிகாட்டுவதாகச் சொல்லப்படுகிறது.
இவ்வாண்டின் தொடக்கத்தில் பலர் குறிப்பாக Gen Alpha இளையர்கள் அதனைப் பயன்படுத்தத் தொடங்கினர். அது பரவியது.
தற்போது #67 எனும் hashtag கொண்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான காணொளிகள் TikTokஇல் உள்ளன.
6-7ஐ எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்தவேண்டும் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் அக்கறையின்மையைக் காட்ட அதனைப் பயன்படுத்துவதாகச் சொல்கின்றனர் சில இளையர்கள்.