Skip to main content
'Gen Z தலைமுறையினருடன் வேலை செய்வது சிரமம்'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

'Gen Z தலைமுறையினருடன் வேலை செய்வது சிரமம்' - இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பிய பதிவு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹர்னித் கோர் (Harnidh Kaur) என்பவர் Gen Z தலைமுறையினரைக் குறைகூறி 'X' தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவு இணையவாசிகளிடையே பெருமளவில் சர்ச்சையைக் கிளப்பியது.

தமது நண்பர்கள் Gen Z தலைமுறையினரை வேலையில் அமர்த்தத் தயங்குவதாகவும் ஹர்னித் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

"Gen Z தலைமுறையினர் மரியாதையின்றி நடந்துகொள்கின்றனர்.அவர்களுடன் வேலை செய்வது சிரமமாக உள்ளது. மற்ற ஊழியர்களுடன் பழக அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால் எனது தலைமுறையைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் அவர்களை வேலையில் சேர்ப்பதில்லை," என்றார் அவர்.

Gen Z தலைமுறையினர் அவர்களது உணர்ச்சிகளுக்கு மற்றவர்கள் மதிப்புக் கொடுத்து நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர்கள் பிறரது உணர்ச்சிகளுக்கு மதிப்புத் தருவதில்லை என்றும் ஹர்னித் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பதிவைக் கண்ட இணையவாசிகள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

"Gen Z தலைமுறையினர் ஊழியர்களுடன் பழகச் சிரமப்படுவது உண்மை என்றபோதிலும் முந்தைய தலைமுறையினர் அக்கறை காட்டாத பல விவகாரங்களில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்," என்று ஒருசிலர் கூறினர்.

"இந்தப் பதிவு குறுகிய கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கிறது," என்று வேறு சிலர் தெரிவித்தனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்