Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

"சிங்கப்பூரா! சிங்கப்பூரா!"... சிங்கப்பூரின் தேசிய கீதம் ஜார்ஜியா சாலையில்!

வாசிப்புநேரம் -
"சிங்கப்பூரா! சிங்கப்பூரா!"... சிங்கப்பூரின் தேசிய கீதம் ஜார்ஜியா சாலையில்!
(படம்: TikTok/ @i_s_ky)
ஜார்ஜியாவில் (Georgia) சிங்கப்பூரின் தேசிய கீதத்தை வாசித்து சிங்கப்பூரர்களின் மனங்களைக் கொள்ளையடித்துள்ளார் ஒரு தெருக்கலைஞர்.

ஜார்ஜியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூரர் அகமது இஸ்கந்தர் அப்துல்லா அவரைச் சந்தித்தார். அவர் சிங்கப்பூரிலிருந்து வந்திருப்பதை அறிந்தவுடன் அந்தக் கலைஞர் சிங்கப்பூரின் தேசிய கீதத்தை அக்கார்டியன் (accordion) இசைக்கருவியில் வாசித்தார்.

வார்த்தைகள் தெரியாவிட்டாலும் அவர் இறுதியில் "சிங்கப்பூரா! சிங்கப்பூரா!" என்று வாய்விட்டுப் பாடினார்.

அதைத் திரு அகமது காணொளியாக எடுத்து TikTok தளத்தில் பதிவிட்டார்.

அது சிங்கப்பூர் இணையவாசிகளின் மனங்களைக் கவர்ந்துள்ளது.

அவருடைய இசைத்திறமையை மக்கள் பாராட்டினர்.

கலைஞருக்குப் பெரிய வெகுமதி வழங்கவேண்டும் என்று ஒருவர் பதிவிட்டார்.

வேறு சிலர் சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்புக்கு அவரை அழைக்கவேண்டும் என்று கூறினர்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்