Skip to main content
இவ்வாண்டின் ராட்சதக் காய்கறிகள்....
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

இவ்வாண்டின் ராட்சதக் காய்கறிகள்....

வாசிப்புநேரம் -
இவ்வாண்டின் ராட்சதக் காய்கறிகள்....
(படம்: guinnessworldrecords.com)

3 மாடிக் கட்டட உயரத்துக்கு ஈடான 11.6 மீட்டர் நீளமான பீர்க்கங்காய்...

ஒன்றரை மீட்டர் புடலங்காய்...

50 செண்டிமீட்டர் கத்திரிக்காய்...

என அந்தக் காய்கறிகள் இவ்வாண்டு உலகச் சாதனை படைத்துள்ளன.

கின்னஸ் உலகச் சாதனை (Guinness World Record) அதன் Facebook பக்கத்தில் பகிர்ந்துகொண்ட காணொளியில் காய்கறிகள் பற்றிய தகவல் இருந்தது.

சாதனை படைத்த காய்கறிகளில் சில, இவ்வாண்டு லண்டனில் நடைபெற்ற ராட்சதக் காய்கறிகள் போட்டியில் இடம்பெற்றிருந்தன.

ஆண்டுதோறும் Malvern Autumn Show எனும் உழவர் கண்காட்சியில் நடைபெறும் அந்தப் போட்டியில் உலகச் சாதனை படைப்பதற்காகவே உழவர்கள் ஒன்றுகூடுவர்.

இவ்வாண்டு மட்டும் போட்டியில் 7 சாதனைகள் படைக்கப்பட்டன!

அவற்றுள் 7.848 மீட்டர் நீளமான வெள்ளை முள்ளங்கியும் அடங்கும்!

காணொளியைக் காணுங்கள் இதோ:

ஆதாரம் : Others/social media

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்