2029 - 2031 : அடுத்தடுத்து வரும் சீனப்புத்தாண்டு, நோன்புப் பெருநாள்

Unsplash/Canva
பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டம்தான்.
அதிலும் ஒன்றைத்தொடர்ந்து மற்றொன்று வர நேர்ந்தால் குதுகலத்திற்கு அளவே இருக்காது.
அந்த வகையில் 2029ஆம் ஆண்டு முதல் 2031ஆம் 3 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகக் 'கொங்சி ராயா' எனப்படும் சீனப் புத்தாண்டைத் தொடர்ந்து ஒரு சில நாளில் வரும் நோன்புப் பெருநாள் விழாக்காலம் அமையக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக 3 ஆண்டுகளிலும் சீனப் புத்தாண்டின் 2ஆம் நாளைத்தொடர்ந்து மறுநாளே நோன்புப் பெருநாள் அனுசரிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
2029
13 பிப்ரவரி - சீனப் புத்தாண்டு முதல் நாள்
14 பிப்ரவரி - சீனப் புத்தாண்டு இரண்டாம் நாள் நாள்
15 பிப்ரவரி - நோன்புப் பெருநாள்
2030
3 பிப்ரவரி - சீனப் புத்தாண்டு முதல் நாள்
4 பிப்ரவரி - சீனப் புத்தாண்டு இரண்டாம் நாள் நாள்
5 பிப்ரவரி - நோன்புப் பெருநாள்
2031
23 ஜனவரி - சீனப் புத்தாண்டு முதல் நாள்
24 ஜனவரி - சீனப் புத்தாண்டு இரண்டாம் நாள் நாள்
25 ஜனவரி - நோன்புப் பெருநாள்
இதற்கு முன்பு 1996 முதல் 1998 வரை, சீனப் புத்தாண்டும் நோன்புப் பெருநாளும் ஒரே வாரத்தில் கொண்டாடப்பட்டன.