Skip to main content
பிரபலமாகும் Nano Banana
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

பிரபலமாகும் Nano Banana- இது என்ன?

வாசிப்புநேரம் -
பிரபலமாகும் Nano Banana- இது என்ன?

படங்கள்: நீவன், அனு, ஷ்ரேயா

வெளியீடு : 18 Sep 2025 08:21AM புதுப்பிப்பு : 18 Sep 2025 09:52AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Google அண்மையில் வெளியிட்ட Gemini செயற்கை நுண்ணறிவுக் கருவியில் ஒரு பாகம் Nano Banana படத்தொகுப்புச் செயலி.

அதை வைத்துப் பலர் விதவிதமான படங்களைத் தயாரிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பலர் அவர்களுடைய Nano Banana படங்களைப் பதிவிடுகின்றனர்.

ஆகப் பிரபலமாக மக்கள் அவர்களுடைய உருவங்களைப் போல் முப்பரிமாண பொம்மையின் படத்தை உருவாக்கிப் பதிவிடுகின்றனர்.

ஏன் பிரபலமானது?

Nano Bananaவை வைத்துப் படங்களில் திருத்தங்கள் செய்வது மிகவும் சுலபமாக இருக்கிறது.

மேலும் கற்பனைக்கு ஏற்ப விரைவாகப் படங்களை உருவாக்க முடிகிறது.

பொம்மை படத்தை எவ்வாறு உருவாக்குவது?

Gemini மூலம் Nano Bananaவைப் பயன்படுத்தலாம்.

Geminiஇடம், "என்னை முப்பரிமாண பொம்மையாக உருமாற்றுங்கள்," என்று கேட்டால் போதும்.

வேறு ஏதாவது கோரிக்கைகள் இருந்தால் அதையும் கேட்கலாம். நிறங்கள், உடைகள், முக பாவனைகள் ஆகியவற்றை மாற்ற விரும்பினால் Nano Bananaவிடம் கேட்டு, அதன்படி படம் மாற்றப்படும்.

எவ்வாறு படங்கள் காட்சியளிக்கும்? சில உதாரணங்கள்...
Related article image
படம்: நீவன்
Related article image
படம்: அனு
Related article image
படம்: ஷ்ரேயா
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்