இணையத்தில் தேட வேண்டுமா? இனி காணொளி வழி தேடலாம்!
வாசிப்புநேரம் -
காணொளி எடுத்து இணையத்தில் தேடும் புதிய அம்சத்தை Google நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அது குறித்து BBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய அம்சத்தில் திறன்பேசி கேமராவில் காணொளி எடுத்து, அதன் தொடர்பில் கேள்வி எழுப்பி, இணையத்தில் பதில்களைப் பெறலாம்.
Android, iPhone பயனீட்டாளர்கள் தங்களது திறன்பேசிகளில் "AI Overviews" அம்சத்தைச் செலுத்திப் புதிய அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இணையத் தேடல்களை மேற்கொள்ளும் முயற்சியில் Google இறங்கியுள்ளது.
ChatGPTஇன் உரிமையாளர் OpenAI அதன் திட்டத்தில் கேள்வி கேட்கும் அம்சத்தைக் கொண்டுவரப்போவதாக அறிவித்த 3 மாதங்களுக்குப் பிறகு Google இந்தப் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
இவ்வாண்டு மே மாதத்தில் இணையத்தில் தேடல் மேற்கொள்ளும்போது செயற்கை நுண்ணறிவு தரும் பதில்களை Google அறிமுகம் செய்தது.
அதில் தவறான, துல்லியமற்ற பதில்கள் இடம்பெற்றிருந்ததாகப் பலர் குறைகூறினர்.

ஆதாரம் : Others/BBC