Skip to main content
குடலில் இருக்கும் நுண்ணுயிர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

குடலில் இருக்கும் நுண்ணுயிர் - அதைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளவேண்டும்?

வாசிப்புநேரம் -
குடலில் இருக்கும் நுண்ணுயிர் - அதைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளவேண்டும்?
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: AP/ Mary Conlon
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நமது குடலில் இருக்கும் நுண்ணுயிர் (gut microbiome) குறித்த ஆர்வம் பலரிடையே அண்மையில் அதிகரித்திருக்கிறது.

அதை வீட்டில் தனியாகச் சோதித்து பார்க்க இப்போது சிறப்புக் கருவிகளும் விற்கப்படுகின்றன.

நுண்ணுயிரைச் சோதிப்பது அவசியமா? அதிலிருந்து கிடைக்கும் முடிவுகள் எதைக் குறிக்கின்றன?

குடலில் இருக்கும் நுண்ணுயிர் ஆரோக்கியமாக இருந்தால் பல நோய்களைத் தவிர்க்க முடியும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. குறிப்பாக, கல்லீரல் நோய், நீரிழிவு ஆகியவற்றைத் தவிர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் நுண்ணுயிரில் ஏற்படும் மாற்றங்கள் நோய்களை விளைவிக்கின்றனவா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்று சில மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மாறாக, மாற்றங்கள் நோய்களின் விளைவாகக் கூட இருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

வீட்டில் சோதனை செய்வது உகந்ததா?........

வீட்டில் பயன்படுத்தப்படும் சோதனைக் கருவிகள் பிரபலமடைந்திருந்தாலும் அவற்றை எந்த அளவு நம்ப முடியும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

சில வேளைகளில் குடலில் வீக்கம் இருப்பதைச் சோதனைகள் சுட்டிக்காட்டுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் சில வேளைகளில் குடல் நுண்ணுயிரில் கருவிகள் சுட்டிக்காட்டும் குறைபாடுகள் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகளுடன் பொருந்தாமல் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்