ஆரோக்கியமாக உணவு உட்கொள்ளும் முறைகள்
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆரோக்கியமாக இருக்கப் பலரும் பல்வேறு உணவுமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
சில உணவு முறைகளில் கட்டுப்பாட்டுகளும் இருக்கும். மாவுச்சத்தைக் குறைத்து உண்ணச் சிலர் முயல்வர். சிலர் கொழுப்புச்சத்தைக் குறைத்து உண்பர்.
ஆனால் இத்தகைய கட்டுப்பாட்டுகளைப் பின்பற்றத் தேவையில்லை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் உணவுவகைகளையும் உட்கொள்ளலாம் என்கின்றனர். சமச்சீராக உண்ணவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
1. பதப்படுத்தப்படாத உணவுவகைகளை உண்ணவேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவில் நார்ச்சத்து குறைந்திருப்பதால் நார்ச்சத்தைப் பெறப் பதப்படுத்தப்படாத உணவைச் சாப்பிடவேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் மேலும் பல வைட்டமின்களையும் பெற முடியும்.
2. ஆரோக்கியமான கொ்ழுப்புச்சத்தைக் கொண்டிருக்கும் உணவை உண்ணவேண்டும். கொட்டைகள், மீன்கள் ஆகிய உணவுகளில் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும்.
3. அதிகளவில் சர்க்கரை இருக்கும் உணவைத் தவிர்க்கவேண்டும். இதய நோய்கள், உடற்பருமன், நீரிழிவு ஆகிய நோய்களைத் தவிர்க்க அதிகமாக சர்க்கரை இருக்கும் உணவைத் தவிர்ப்பது அவசியம். ஒரு நாளில் பெண்கள் 25 கிராம்வரையும் ஆண்கள் 36 கிராம்வரையும் அதிக சர்க்கரையைச் சாப்பிடலாம் என்று அமெரிக்காவின் இதயச் சுகாதாரச் சங்கம் அறிவித்திருக்கிறது.
4. அதிகளவில் வீட்டில் சமைத்ததை உண்ணவேண்டும். வீட்டில் சமைக்கும்போது ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடுவது எளிதாகும். மேலும் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : Others