வாழ்வியல் trending
மனிதக் கையா? சேனைக் கிழங்கா?
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
This audio is generated by an AI tool.
சீனாவில் விநோத வடிவத்தில் ஒரு சேனைக் கிழங்கு!
மனிதக் கைபோன்ற அந்தச் சேனைக் கிழங்கை குவாங்டோங்கில் ஒரு மூத்த விவசாயி அவரின் தோட்டத்தில் அறுவடை செய்திருக்கிறார்.
முதலில் பயந்த விவசாயி பின்னர் அதனைப் பார்த்து வியந்தார்.
இணையத்தில் செய்தி பரவியது.
அந்தக் கிழங்கை வாங்குவதற்குச் சிலர் முன்வந்திருக்கின்றனர்.
கிட்டதட்ட 1,500 டாலர் வரை கொடுப்பதற்கு தயார் என்றார் ஒருவர்.
விவசாயி குடும்பம் அதனை விற்க மறுத்தது.
அடுத்து என்ன செய்யலாம் என்று இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றனர் அவர்கள்.
உண்மையான கைபோலவே அது இருப்பதாகப் பலரும் இணையத்தில் பிரமிப்படைகின்றனர்.
மண்ணைப் பொறுத்து அதனடியில் வளரும் சேனைக் கிழங்கின் வடிவம் அமையும் என்று தோட்டக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில சேனைக்கிழங்குகள் விலங்குகளின் வடிவத்தில் இருப்பதுண்டு.