Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சீனாவில் மாயப் பனிப்பூங்கா

வாசிப்புநேரம் -
சீனாவின் ஹார்பின் நகரம் ஒரு மாய வெண்பனி நகரமாக உருமாறியுள்ளது.

வெள்ளைப் போர்வைக்குள் புதைந்து கிடக்கும் அந்நகரின் அழகை வார்த்தைகளால் வருணிப்பது சிரமம்.

உலகப் புகழ்பெற்ற ஹார்பின் பனிக் கண்காட்சி 26ஆவது முறையாக நடத்தப்படுகிறது.

இத்தனை ஆண்டுகளில் இல்லாத வகையில் இம்முறை 1 மில்லியன் சதுர மீட்டர் அளவில் பனிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இம்முறை என்னென்ன புதிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன என்பதைக் காண பார்வையாளர்கள் ஆவலுடன் வந்திருந்தனர்.

பனிச்சறுக்கு 'Super Ice Slide' என்று பெயரிடப்பட்டது.

300 மீட்டர் நீளமுள்ள 24 சறுக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகமானோர் சறுக்கில் செல்ல விரும்புவது வழக்கம்.

அதனால் அதற்கான வரிசை எப்போதும் நீளமாகவே இருக்கும்.

மக்கள் குளிரில் நடுங்காமல், பூங்காவை ரசித்த வண்ணம் காத்திருக்க ஒரு சிறு குடிசை அமைக்கப்பட்டுள்ளது.

42 நாடுகளில் உள்ள பிரபலமான கட்டடங்கள் அங்குப் பனி வடிவில் உயிர்பெற்றுள்ளன.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்