Skip to main content
புதிய இடத்தில் ஏன் நன்றாகத் தூக்கம் வருவதில்லை?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

புதிய இடத்தில் ஏன் நன்றாகத் தூக்கம் வருவதில்லை?

வாசிப்புநேரம் -
புதிய இடத்தில் ஏன் நன்றாகத் தூக்கம் வருவதில்லை?

(படம்:unsplash)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

புதிய நகரம்.

புதிய வீடு.

அல்லது புதிய ஹோட்டல் அறை.

அனைத்தும் வசதியாக இருந்தாலும் முதல் நாள் இரவில் மட்டும் பலரால் நிம்மதியாகத் தூங்க முடியாது.

தூக்கம் தாமதமாக வரும்.

அடிக்கடி விழிப்பு ஏற்படும்.

வழக்கத்தைவிடக் குறைவாகவே தூங்கியிருப்பார்கள்.

இதையே தூக்க நிபுணர்கள் "முதல் இரவு விளைவு" (First-night effect) என்று அழைக்கின்றனர்.

புதிய சூழல் பாதுகாப்பானதா என்பதை மூளை தொடர்ந்து கண்காணிப்பதால் இவ்வாறு நடப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் தூக்கத்தின் ஆழமும் குறைகிறது.

சராசரியாகப் புதிய இடத்தில் முதல் இரவு 20 முதல் 30 நிமிடங்கள் வரை குறைவாகத் தூங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள், பதின்ம வயதினர், முதியவர்களிடம் இதனை அதிகமாகக் காணலாம்.

புதிய இடம் பற்றிய பதற்றமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

பயணம், அறையின் வெப்பநிலை, வெளிச்சம், சத்தம், குடும்ப உறவுகள் தொடர்பான மனஅழுத்தம் போன்றவையும் தூக்கத்தைப் பாதிக்கக்கூடும்.

ஆனால் இந்த நிலை பெரும்பாலும் முதல் இரவுக்குப் பிறகு மாறத் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

என்ன செய்யலாம்?

😴படுக்கச் செல்லும் நேரத்தை வழக்கம்போலக் கடைப்பிடிக்க வேண்டும்.

😴 தூங்குவதற்கு முன் கைத்தொலைபேசி, கணினி போன்ற திரைகளைத் தவிர்க்கவேண்டும்.

😴 புதிய இடத்தையும் பழக்கமானதாக உணர பிடித்த தலையணை அல்லது போர்வையை எடுத்துச் செல்லலாம்.

😴 முக்கியமான கூட்டமோ நிகழ்ச்சியோ இருந்தால் ஒருநாள் முன்னதாகச் சென்று தங்குவதும் நல்ல யோசனை என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆதாரம் : CNN

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்