தித்திக்கும் மாம்பழங்களில் இவ்வளவு சத்துக்களா?
படம்: Envato Elements
This audio is generated by an AI tool.
மாம்பழமாம் மாம்பழம், தித்திக்கும் மாம்பழம்...
தோல் சீவிய மாம்பழத்தின் ஒரு பாதியில் சுமார் 23 கிராம் சர்க்கரை உள்ளது.
கடைகளில் விற்கப்படும் சாக்லெட் சிப் பிஸ்கட்டுகளில் உள்ளதைப் போல் அதன் சர்க்கரை அளவு இரட்டிப்பாகும்.
இனிப்பு நிறைந்த பழம் என்றபோதும் மாம்பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அம்சங்களைக் கொண்டுள்ளது.
மாம்பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரை, ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை என்று கூறுகிறார் அமெரிக்க உணவு ஆலோசகர் ஜெசிக்கா ஹிகின்ஸ் (Jessica Higgins).
ஒரு மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து, நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் அளவில் சுமார் 20 விழுக்காட்டினைப் பூர்த்தி செய்யக்கூடும். அதே வேளையில் உடலில் உள்ள கொழுப்பின் அளவைச் சீராக வைத்திருக்கவும் அது உதவுகிறது என்று அமெரிக்காவின் டெக்சஸ் A&M பல்கலைக்கழகத் துணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்டெஃப்பனி ரோகஸ் (Dr. Stephanie Rogus) சொல்கிறார்.
ஆரஞ்சு, நாரத்தம்பழம் ஆகியவற்றின் காணப்படும் அளவு Vitamin C சத்து, மாம்பழத்திலும் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் Rhode Island பல்கலைக்கழகத் துணை பேராசிரியர் டாக்டர் மாயா வடிவேலு (Dr. Maya Vadiveloo) . உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் Vitamin C கைகொடுக்கிறது.
அதிகளவு உப்பு நிறைந்த உணவை உட்கொள்வதால் இதய நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கலாம். அதனைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது potassium.
அது ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு வாழைப்பழத்தில் காணப்படும் potassium அளவில் பாதி, ஒரு பாதி மாம்பழத்தில் உள்ளது.
உலர்ந்த நிலையில் உள்ள மாம்பழங்களைக் காட்டிலும் உறைந்த நிலையில் உள்ளவற்றைச் சாப்பிடுவது மேலும் சிறந்தது என்றார் டாக்டர் மாயா.
எதுவுமே அளவோடு இருந்தால் பயன் தரக்கூடும்.