Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

காது கேட்காது... ஆனால் இணையம்வழி வாரத்திற்கு 70,000 வெள்ளிக்குப் பொருள்கள் விற்கும் பெண்

வாசிப்புநேரம் -

லில்லி கோ (Lily Goh). 43 வயது பெண். காது கேட்காது. 2 வயது இருக்கும்போதுதான் கோவுக்குக் காது கேட்காது என்பதை அவரது பெற்றோர் அறிந்துகொண்டனர்.  

சிறுவயதில் பெரும்பாலான நேரங்களைத் தனிமையில் கடந்துவந்தார் கோ. 

ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வந்ததாலேயே இணைய வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக கோ CNAயிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் Mdada சமூக வர்த்தகத்தளத்தில் இணைந்தார். அந்தத் தளத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலானவர்களுக்குக் காது கேளாமைப் பிரச்சினை இல்லை. கோ சிங்கப்பூரில் காது கேளாதவர்கள் பயன்படுத்தும் சைகை மொழியுடன் ஓரிரு ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பொருள்களை விற்பனை செய்கிறார்.

முதலில் இந்த வேலை கிடைத்தபோது கோவின் நண்பர்கள் பலர் அவரை அவ்வளவாக ஊக்குவில்லை. அதனால் தமக்கும் சிறு தயக்கம் இருந்ததாக கோ சொன்னார். ஆனாலும் நிறுவனம் தமக்களித்த ஊக்கத்தினால் முயன்று பார்க்க முடிவெடுத்ததாக கோ தெரிவித்தார். 

இணையத்தில் நேரடி விற்பனையைத் தொடங்குவதற்கு முன்பாக, விற்கவிருக்கும் பொருள்கள் குறித்து Googleஇல் விவரங்களைத் திரட்டுவது வழக்கம் என்றார் கோ.  

கண்களுக்குப் போடும் கிரீம் உள்ளிட்ட அழகுச்சாதனப் பொருள்களை முதலில் விற்கத்  தொடங்கியதாகத் தெரிவித்தார் கோ. 

அது முடிந்தபிறகு காது கேளாத தமது இதர நண்பர்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகள் கூறியதாகவும் கோ சொன்னார்.

சவால்கள் பல இருந்தாலும் தொடர் முயற்சியால் ஒரு மணி நேரத்தில் 3 பொருள்கள் வரை விற்ற கோ தற்போது 2 மணி நேரத்தில் 10 பொருள்கள்வரை விற்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார். 
கடந்த 3 மாதங்களில் கோ 200,000 வெள்ளி பெறுமானமுள்ள பொருள்களை விற்றுள்ளார். 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்