Skip to main content
ஹலோவீன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

ஹலோவீன் - நடமாடிய கை

வாசிப்புநேரம் -
ஹலோவீன் - நடமாடிய கை

Evan Agostini/Invision/AP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரபல விளம்பர அழகி ஹைடி குளும் (Heidi Klum) இந்த ஆண்டு ஹலோவீனிற்கு ஒரு துண்டிக்கப்பட்ட கையாக வேடமிட்டிருக்கிறார்.

அதுவும் அவருடைய கையைப் போலவே.

கடந்த 25 அண்டாக ஹலோவீன் ஒன்றுகூடல்களை ஏற்பாடு செய்து வருகிறார் குளும்.

பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு நிகழ்வு.

இதுவரை குளும் ஒரு மயில், 2.4 மீட்டர் உயர "Transformer", கிரேக்க புராணத்தின் மெடுசா (Medusa) உள்ளிட்ட வேடங்களை அணிந்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஒரு ராட்சத கையாக வேண்டும் என்ற ஆசை.

சென்ற வருடமே யோசனை பிறந்தது.

தமது இடது கையைப் பார்த்தபோது, "இந்த வடிவத்திற்குள் எனது உடலை புகுத்தலாமே" என்று யோசித்தாராம்.

ரத்தம் சொட்டச் சொட்ட வந்த குளுமை அடையாளமே தெரியவில்லை.

வேடத்திற்கு மத்தியில் குளுமின் கண்களும் வாயும் மட்டும் தெரிந்தன.

வேடத்தை அணிய 5 முதல் 6 மணி நேரம் எடுத்ததாகக் கூறினார் குளும்.

அதைத் தயாரிப்பதற்கு அதைவிட அதிக காலம் பிடித்தது.

மோதிர விரலில் கணவரின் பெயர் கொண்ட பச்சை, கை ரேகை உள்ளிட்ட நுணுக்கங்கள் நிறைந்த பிரமிக்கவைக்கும் வேடம்.

ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்