பிரிட்டிஷ் பள்ளிகளில் காட்டப்படும் Netflix-இன் 'Adolescence' நாடகத் தொடர்
வாசிப்புநேரம் -

(படம்: Netflix via AP)
"பிள்ளைகளைச் சமூக ஊடகங்களில் இடம்பெறும் தீங்கு உள்ளடக்கங்களிலிருந்து எப்படி பாதுகாக்கலாம்?"
Netflix தளத்தின் பிரபலமான 'Adolescence' தொடரின் இயக்குநர்கள் அதைப் பற்றிப் பேசி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிராக வெறுப்பைக் காட்டுவது பற்றியும் அவர்கள் பேசுகின்றனர்.
அதன் பலனாக பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரை (Keir Starmer) நேரடியாகச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
'Adolescence' தொடரைப் பிரிட்டன் முழுவதும் உள்ள உயர்நிலைப்பள்ளிகளில் இலவசமாகக் காட்டும் Netflix-இன் முயற்சிக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கூடுதல் இளையர்கள் அந்தத் தொடரைக் காண வேண்டும் என்பது நோக்கம்.
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட அந்தத் தொடரில் 13 வயது இளையர் மீது தம்முடைய பள்ளியில் பயிலும் பெண்ணைக் குத்திக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இளையர் அந்தச் செயலைச் செய்ய எது ஊக்குவித்தது? சமூக ஊடகத்தில் இடம்பெறும் உள்ளடக்கங்களா? போன்ற கேள்விகளைத் தொடர் களையும்.
சென்ற மாதம் அறிமுகமான அந்தத் தொடரை உலகெங்கும் 66 மில்லியன் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.
"ஆரோக்கியமான உறவு, பெண்களுக்கு எதிரான வெறுப்பு ஏற்படுத்தும் தாக்கம், இணையத்தின் தாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள தொடர் உதவும்" என்றார் பிரதமர் ஸ்டாமர்.

ஆதாரம் : AP