Skip to main content
மனிதர் பயந்தால் குதிரைக்குத் தெரியும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

மனிதர் பயந்தால் குதிரைக்குத் தெரியும்

வாசிப்புநேரம் -
மனிதர்களுக்கு எத்தனையோ விதமான அச்சங்கள்.

அந்த அச்சங்களை முகர்ந்து உணர்ந்து கொள்ளும் ஆற்றல் குதிரைக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பயந்தவர்களைக் கண்டதும் குதிரை பயந்துவிடுவதாகப் புதிய ஆய்வு சொல்கிறது.

எதிர்காலத்தில் செய்யப்படும் ஆய்வுகள் அதை உறுதிப்படுத்தினால், பயம் விலங்கிற்கும் மனிதருக்கும் இடையே பரவக்கூடியது என்று பொருள்படும்.

ஆய்வின் முடிவு மனிதர்களுக்கும் விலங்கிற்கும் இடையே இருக்கும் உறவைப் புலப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுவரை உள்ள ஆய்வு, அச்சம் என்பது மனிதருக்கும் குதிரைக்கும் இடையே தொற்றிக்கொள்ளக் கூடிய ஒன்று என்று சொல்கிறது.

மனிதர்கள் அவர்கள் அறியாமலேயே தங்கள் உணர்வுகளை விலங்குகளிடம் பரப்புகின்றனர்.

முகர்ந்து பார்த்து மனிதர்களை விலங்குகள் புரிந்து கொள்கின்றன.

சோகப் படங்களைப் பார்க்கும்போதும், மகிழ்ச்சியான படங்களைப் பார்க்கும்போதும் மனிதர்கள் வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அவற்றைக் குதிரைகள் அடையாளம் காண்பது இதுவரையிலான ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆதாரம் : Others/The Guardian

மேலும் செய்திகள் கட்டுரைகள்