சுட்டெரிக்கும் வெயில்... குடையின் நிறம் முக்கியமா?
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
வெயில் காலத்தில் குடையைப் பயன்படுத்தும் பழக்கம் உண்டா?
JAMA Dermatology எனும் சஞ்சிகையில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, குடைகள் குறைந்தது 70 விழுக்காட்டுப் பாதுகாப்பை அளிக்கின்றன.
குறிப்பாகச் சருமத்தைப் பாதிக்கக்கூடிய சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து (ultraviolet (UV)) குடைகள் பாதுகாக்கின்றன.
ஆனால் ஒருசில குடைகளைப் பயன்படுத்தும்போது கூடுதல் பாதுகாப்பு கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
குடை கறுநிறமாக இருக்கும்போது...
கறுப்பு அல்லது கறுநிறத்தில் உள்ள குடைகள் குறைந்தது 90 விழுக்காட்டுப் பாதுகாப்பை அளிக்கலாம்.
அத்தகைய நிறங்கள் வெப்பத்தை உறிஞ்சிவிடும் ஆற்றலைக் கொண்டவை. அவை UV கதிர்கள் உடலை எட்டவிடாமல் தடுத்துவிடும் என்று Times of India செய்தி நிறுவனம் கூறியது.
குடையின் துணி கனமாக இருக்கும்போது...
நிறம் ஒரு பக்கம் இருக்க...குடையின் அளவையும் குடையின் துணி எதில் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"துணி எவ்வளவு கனமாக இருக்கிறதோ...குடை எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ...அவ்வளவு பாதுகாப்பு கிடைக்கும்," என்றார் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகரைச் சேர்ந்த தோல் நிபுணர் ஜெஸ்ஸிகா வூ (Jessica Wu).
குடையில் UV பாதுகாப்பு இருக்கும்போது..
UV குடைகள் என்பவை பார்ப்பதற்கு வழக்கமான குடைகளைப் போல் இருந்தாலும் அவற்றைத் திறந்து பார்க்கும்போது குடையின் துணியில் இரண்டு படிவகங்களைக் காணலாம்.
இரண்டாவது படிவத்தில் உள்ள துணி கறுநிறத்தில் இருக்கும். அது UV கதிர்கள் உடலை எட்டவிடாமல் தடுக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.

ஆதாரம் : Others