வாழ்வியல் trending
50 ஆண்டுகள் மருத்துவரைப் பார்க்காத 102 வயது 'Old Baby' ரகசியம்
வாசிப்புநேரம் -
கிழக்கு சீனாவைச் சேர்ந்த ஜின் பாவ்லிங் (Jin Baoling) தமது தனித்துவமான வாழ்க்கை முறையால் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளார்.
அவருக்கு வயது 102.
அவரை ஊர் மக்கள் அன்புடன் "வயதான குழந்தை" (Old baby) என்று அழைக்கிறார்கள்.
அவரது உணவுப் பழக்கம் விநோதமாக இருக்கிறது.
இறைச்சி என்றால் விருப்பம்.....கொலாஜன் (collagen) சத்து நிறைந்த பன்றிக் கால்களை (Pig Trotters) தினமும் உணவில் சேர்த்துக் கொள்வார். ஒவ்வொரு வேளைக்கும் சுமார் கால் கிலோ வரை அதனைச் சாப்பிடுகிறார்.
காய்கறிகளை அவ்வளவாக விரும்பி உண்பதில்லை.
ஒவ்வொரு வேளை உணவோடும் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
பழங்கள், முட்டைகள், இனிப்புப் பண்டங்களையும் ரசித்து, ருசித்து உண்கிறார்.
நாளொன்றுக்குச் சுமார் 15 மணிநேரம் உறங்குகிறார்.
காலை 9 மணிக்கு எழுந்து, தோட்டத்தில் வெயில் காய்வார்.
இரவு 7 மணிக்கெல்லாம் மீண்டும் உறங்கச் சென்றுவிடுவார்.
பகல் பொழுதில் அவ்வப்போது குட்டித் தூக்கமும் போடுவார்.
கடந்த 50 ஆண்டுகளில் ஒருமுறை கூட மருத்துவமனைக்குச் சென்றதில்லை.
இது எப்படிச் சாத்தியம்?
"என் தாய் யாரிடமும் வாக்குவாதம் செய்ததில்லை. கவலைகள் எழுந்தால் உடனே மறப்பார். குடும்ப ஒற்றுமையே அவருக்கு முக்கியம்," என அவருடைய மகன் South China Morning Post நாளேட்டிடம் பகிர்ந்துகொண்டார்.
அளவுக்கு மிஞ்சிய கவலைகளும், தேவையற்ற சிந்தனைகளும் இல்லாத மனமே ஆரோக்கியமான வாழ்வின் திறவுகோல் என்று இணையவாசிகள் கூறுகின்றனர்.

ஆதாரம் : South China Morning Post