Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

Telegram செயலியில் சூதாட்டம் அல்லது முதலீட்டுக் குழுக்களில் சேர்க்கப்படுகிறீர்களா? - அதற்கான தீர்வு இதோ!

வாசிப்புநேரம் -
Telegram செயலியில் சூதாட்டம் அல்லது முதலீட்டுக் குழுக்களில் சேர்க்கப்படுகிறீர்களா? - அதற்கான தீர்வு இதோ!

(கோப்புப் படம்: SPF)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் அதிகமானோர் Telegram தளத்தில் மோசடிக்கு ஆளாவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முற்பாதியில் Telegram தளத்தில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 137.5 விழுக்காடு உயர்ந்தது.

சூதாட்டம், முதலீடு போன்ற குழுக்களில் தானாகச் சேர்க்கப்படுகிறீர்களா? எப்படித் தவிர்ப்பது?

தெரியாத குழுக்களில் சேர்க்கப்படாமல் இருக்க வழி

-Telegram செயலியில் முதலில் "Settings" தெரிவை அழுத்த வேண்டும்.

-அதன் கீழ் வரும் "Privacy and Security" பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

-அதன் கீழ் "Invites" என்ற தெரிவு வரும். அதில் யார் யார் உங்களைக் குழுக்களில் சேர்க்கலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

-வழக்கமாக அனைவரின் Telegram செயலியிலும் "அனைவரும்" என்ற தெரிவு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

-அப்படியென்றால் யார் வேண்டுமானாலும் உங்களை Telegram குழுக்களில் சேர்க்கலாம்.

-நீங்கள் "நான் தொலைபேசியில் வைத்திருக்கும் தொலைபேசி எண்கள் மட்டும்" என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கலாம்.

-அப்படிச் செய்வதால் உங்களுக்குத் தெரிந்தவர்கள் மட்டும்தான் உங்களை Telegram குழுக்களில் சேர்க்க முடியும்.

-அப்படி எந்தக் குழுக்களிலுமே நீங்கள் சேர விரும்பவில்லை என்றால் "யாருக்கும் அனுமதியில்லை" எனும் தெரிவைத் தேர்ந்தெடுக்கலாம்.

இதன் மூலம் தேவையற்ற குழுக்களில் சேர்க்கப்படுவதைத் தவிர்க்கலாம். 

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்