தென்கொரியாவிலிருந்து சென்னை வரை : அன்பால் உருவான புதிய வீடு
வாசிப்புநேரம் -
படம்: CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தென்கொரியாவிலிருந்து சென்னைக்குச் சென்ற உம் ஜுங்-ஏ (Um Jung-ae), எர்னி பார்க் (Ernie Park), கிம் ஹியுன்-கன் (Kim Hyun-gan) ஆகிய மூவருக்கும் அந்த நகரம் ஆரம்பத்தில் புதிதாக இருந்தது.
ஆனால் காலப்போக்கில் சென்னை அவர்களின் இரண்டாவது இல்லமாக மாறியுள்ளது.
தியாகராய நகரில் சேலை வாங்கும்போது தமிழில் பேரம் பேசும் அளவுக்கு மொழியைக் கற்றுக்கொண்டுள்ள உம் ஜுங்-ஏ, இந்தியா குறித்த தனது எண்ணங்கள் அனைத்தும் மாறிவிட்டதாகக் கூறினார்.
அவரது குடும்பத்தினர் இன்று தோசையை விரும்பிச் சாப்பிடுவதோடு அவர் சமூக ஊடகங்கள் வழியாக சென்னை வாழ்க்கையை ஆயிரக்கணக்கானோருடன் பகிர்ந்து வருகிறார்.
சுமார் 10 ஆண்டுகளாக சென்னையில் வசிக்கும் எர்னி பார்க், அலைச்சறுக்கு விளையாட்டின் மூலம் இந்திய நண்பர்களைப் பெற்றார்.
அந்த நட்பு அவரை நகரின் கலாசாரத்தோடும் மக்களோடும் நெருக்கமாய் இணைத்தது.
2012ஆம் ஆண்டு சென்னையில் குடியேறிய கிம் ஹியுன்-கன், பூப்பந்தாட்டம், கொரிய மொழி கற்பித்தல் வழியாக தனது சமூக வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
இந்தியர்களின் மொழி கற்கும் திறன் தம்மை வியக்க வைத்ததாக அவர் தெரிவித்தார்.
உணவு, மொழி, நட்பு, கலாசாரம் என பல வழிகளில் இந்த மூவரும் சென்னையுடன் ஆழமான பிணைப்பை உருவாக்கியுள்ளனர்.
பிறந்த நாடு வேறாக இருந்தாலும் அன்பும் ஏற்றுக்கொள்ளுதலும் ஒரு நகரத்தை வீடாக மாற்ற முடியும் என்பதற்கு இவர்களின் வாழ்க்கையே சான்றாக உள்ளது.

ஆதாரம் : CNA