அன்னையர் தினம் - ஏன் வந்தது? எப்படி வந்தது?
Unsplash/Liv Bruce
This audio is generated by an AI tool.
இன்று உலகெங்கும் அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அன்னையர் தினம் எப்போது தொடங்கப்பட்டது?
ஐரோப்பிய வரலாற்றில் Middle Ages எனும் காலக்கட்டத்தில் (5 முதல் 15ஆம் நூற்றாண்டு வரை) பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து வெளியேறியோர் மீண்டும் தங்களுடைய தாயாரைச் சந்திக்க வருவர்.
கிறிஸ்துவர்கள் அனுசரிக்கும் Lent திருவிழாவின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை அந்த நிகழ்வு இடம்பெறும்.
அந்தக் காலத்தில் 10 வயதுப் பிள்ளைகள் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறி வேலை தேடிச் செல்வது வழக்கமாக இருந்தது.
அதனால் அந்தத் தினம் குடும்பங்கள் ஒன்றுகூட ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்பட்டது.
பிரிட்டனில் அது "Mothering Sunday" என அழைக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் Lent திருவிழாவின் தேதிகள் மாறுபடுவதால் Mothering Sunday-யின் தேதியும் மாறுபடும்.
பிரிட்டனில் அது அன்னையர் தினம் என்று அழைக்கப்பட்டாலும் அமெரிக்காவில் கொண்டாடப்படும் அன்னையர் தினத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை.
மற்ற நாடுகளில் அன்னையர் தினம் எப்படி அனுசரிக்கப்படுகிறது?
அமெரிக்காவில் மே மாதத்தின் 2ஆம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த அனா ஜார்விஸ் (Anna Jarvis) தம்முடைய தாயாருக்குச் சிறிய நினைவஞ்சலி நிகழ்வை 1907ஆம் ஆண்டு மே 12 அன்று நடத்தினார்.
பிறகு அமெரிக்காவில் பல பகுதிகளில் அந்த நாள் அன்னையர் தினமாக அனுசரிக்கப்பட்டது.
1914ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் அதனைத் தேசிய விடுமுறையாக அறிவித்தார்.
பரிசுப் பொருட்களை விற்க நிறுவனங்கள் அந்த நாளைப் பயன்படுத்திக்கொண்டது அனாவுக்குச் சினமூட்டியது.
பிறகு அவர் அந்த நாளை நாட்காட்டியிலிருந்து அகற்றும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.