நீண்டகாலம் உடற்பயிற்சி செய்தால் முதுமையடைவதை தள்ளிப் போடலாமா?
வாசிப்புநேரம் -

Unsplash/Anupam Mahapatra
நீண்டகாலம் உடற்பயிற்சி செய்தால் முதுமையடைவதை மெதுவடையச் செய்யலாம் என்று சீன அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அது குறித்து South China Morning Post நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
முதலில் ஆய்வு எலிகளுடன் தொடங்கப்பட்டது.
பின்னர் ஆரோக்கியமான ஆண்கள் சிலர் அதில் கலந்துகொண்டனர். அவர்கள் 40 நிமிடங்களில் 5 கிலோமீட்டர் தூரம் ஓடினர். 25 நாள்களுக்குத் தொடர்ந்து உடற்பயிற்சியைச் செய்தனர். அது நீண்ட காலத்துக்குத் தொடர்ந்தது.
அவர்களது ரத்தம், கழிவுகள், சுகாதார பரிசோதனை தரவுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
6 ஆண்டு காலம் நடைபெற்ற ஆய்வின் முடிவில் சிறுநீரகமே முதுமையடைவதைத் தவிர்க்கும் பிரதான உறுப்பு என்று தெரியவந்துள்ளது.
சிறுநீரகத்தில் இயற்கையாக உருவாகும் பீடைன் (Betein), தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் சுரக்கிறது.
பீடைன், வீக்கத்தைத் தடுப்பதோடு உடலுறுப்புகள் தளர்வதையும் தடுக்கிறது.
வயதான எலிகளுக்குப் பீடைனைச் செலுத்தியபோது அவற்றின் வாழ்நாள் அதிகரித்தது. அவற்றின் மனச்சோர்வு குறைந்தது; அறிவாற்றல் மேம்பட்டது.
மனிதர்களிடையே முதுமையடைவதைத் தவிர்ப்பதற்கும் பீடைன் உதவலாம் என்கிறார்கள் அறிவியளாலர்கள்.
அது உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத முதியவர்களுக்குப் பயனளிக்கும்.

ஆதாரம் : Others