அவித்த முட்டை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?

Unsplash/tamanna rumee
திடமான வெள்ளைக் கரு..மிருதுவான மஞ்சள் கரு...
அவித்த முட்டை என்றால் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.
அத்தகைய முட்டையை அவிக்க 32 நிமிடங்களாகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அதிக வெப்பத்தில் முட்டையை அவிப்போருக்குப் பொதுவாக மஞ்சள் கரு மாவானதைப்போல் ஆகிவிடும்.
முட்டையைக் குறைவான வெப்பத்தில் அவிப்போருக்கு வெள்ளைக் கரு குழைந்துபோனதைப்போல் ஆகிவிடும்.
முட்டையை இரண்டு நிமிடங்கள் கொதிக்கும் தண்ணீரிலும் இரண்டு நிமிடங்கள் வெதுவெதுப்பான தண்ணீரிலும் மாற்றி மாற்றி வைக்கவேண்டும்...
32 நிமிடங்கள் ஆனதும் முட்டையை ஓடும் நீரில் கழுவவேண்டும்...
அப்போது உரிக்கும் முட்டை..ரொட்டியில் தடவிச் சாப்பிடக்கூடிய பதத்தைக் கொண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
நூற்றுக்கணக்கான முட்டைகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகள் Communications Engineering சஞ்சிகையில் வெளியானது.
'முட்டையை அவித்தோமா, சாப்பிட்டோமா' என்று எண்ணுவோர் இவ்வளவு நேரத்தை முட்டை அவிக்கச் செலவிடுவார்களா என்பது தெரியவில்லை...
ஆனால் பொறுமை காப்போருக்குத் தனிச் சுவை கிடைக்கலாம்!