Skip to main content
மனிதர்கள் நூறாண்டு வாழ உதவும் மரபணுக்கள்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

மனிதர்கள் நூறாண்டு வாழ உதவும் மரபணுக்கள்?

வாசிப்புநேரம் -
மனிதர்கள் நூறாண்டு வாழ உதவும் மரபணுக்கள்?
படம்: Envato Elements
ஒருவரின் ஆயுட்காலம் எவ்வளவு என்பதை அவருடைய மரபணுவும் தீர்மானிக்கிறது என்பது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒருவரின் வாழ்நாளின் பாதியை முடிவுசெய்வதில் அவருடைய மரபணுக்களுக்குப் பெரும்பங்கு உண்டு என்கிறது ஆய்வு. முன்னர் செய்யப்பட்ட ஆய்வுகளில் கூறப்பட்ட அளவை விட அது அதிகம்.

நவீன மருத்துவம் உலகில் அறிமுகமாவதற்குள் நேர்ந்த உயிரிழப்புகள் முன்னர் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

விபத்துகள், வன்முறை அல்லது தொற்றுநோய்களால் ஏற்படும் மரணத்தில் மரபணுக்களின் பங்கு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மரணத்துக்கான வெளிப்புறக் காரணங்களைக் கவனத்தில் கொள்வதன் மூலம், விலங்குகளைப் போலவே மனிதர்களின் ஆயுட்காலத்துக்கு அவர்களின் மரபணுக்கள் பெரும்பங்காற்றுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புதிய ஆய்வின் முடிவு மரபணு ஆராய்ச்சிக்குப் பெரும் ஊக்கமளிக்கிறது.

பாதுகாக்கப்பட்ட மரபணுக்கள் ஒருவர் நூற்றாண்டு தாண்டியும் உயிர்வாழ உதவலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்