Skip to main content
10 விநாடியில் உறக்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

10 விநாடியில் உறக்கம்

வாசிப்புநேரம் -
10 விநாடியில் உறக்கம்

Unsplash/Annie Spratt

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 10 Sep 2025 07:15AM புதுப்பிப்பு : 10 Sep 2025 10:00AM
சிலர் தூங்குவதற்குக் கடினமாக முயற்சி செய்வார்கள்.

அவ்வாறு செய்யும்போது மூளை ஓய்வெடுப்பதற்குப் பதிலாக விழிப்பு நிலைக்குச் சென்றுவிடும் என்கிறது ஆய்வு.

இதனால் உடல் இறுக்கமடைந்து, மனம் அமைதி இழந்து, கடைசியில் தூக்கமின்மைப் பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இதற்குத் தீர்வு? "The Military Method".

இது அமெரிக்காவில் Navy Pre-Flight School விமானிகள் குறைந்தது 2 நிமிடங்கள் தூங்குவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட வழிமுறை என்று குறிப்பிடுகிறது Berita Harian செய்தி.

எப்படிச் செய்வது?

1. முதலில் முகத் தசைகளைத் தளர்த்த வேண்டும்.

2. தோள்பட்டையை இறக்கி இறுக்கத்தைக் குறைத்து கைகளை இரு பக்கங்களிலும் வைக்கவேண்டும்.

3. மெதுவாகச் சுவாசிக்க வேண்டும்.

4. தொடை, கணுக்கால், பாதங்களைத் தளர்த்த வேண்டும்.

5. பத்து விநாடிகளுக்கு மனத்தைத் தெளிவாக வைக்க வேண்டும் - ஏதாவது ஆறுதல்தரும் காட்சியைக் கற்பனை செய்துகொள்ளலாம்.

6. கவனம் செலுத்த சிரமமாக இருந்தால் "எதையும் சிந்திக்க வேண்டாம்" என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ள வேண்டும் - இதனை 10 விநாடிகளுக்குத் திரும்பச் சொல்ல வேண்டும்.

7. பத்தே விநாடிகளில் உங்கள் கண்களைத் தூக்கம் தழுவும்.
 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்