Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உங்களாலும் நெடுந்தொலைவு ஓட்டத்தில் ஓட முடியும்.. இப்படி!

வாசிப்புநேரம் -
நெடுந்தொலைவு ஓட்டத்தில் பங்கேற்பது சாத்தியமா?

நம்மால் முடியுமா?

என்ற கேள்விகள் பலரிடையே இருப்பது வழக்கம்.

அதற்கு நன்கு தயார் செய்தால் நெடுந்தொலைவில் நிச்சயம் கலந்துகொள்ளலாம் என்று New York Times நாளேடு தெரிவித்தது.

ஆனால் ஆயத்தங்கள் சுலபமில்லை என்றும் அது நினைவூட்டியது.

நெடுந்தொலைவு ஓட்டத்தில் 42 கிலோமீட்டர் தூரம் ஓட வேண்டும்..

அதற்கு 4 மாதங்களுக்கு உழைக்கவேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஓர் இலக்கை அடையவேண்டும்.

முதல் மாதம்

-- வலுவையும் சகிப்புத்தன்மையையும் படிப்படியாக வளர்க்க வாரத்தில் 4-5 முறை ஓடவேண்டும்
-- அதில் ஒருநாள் குறைந்தது 16 கிலோமீட்டர் ஓடவேண்டும்
-- வாரத்தில் இரு முறையாவது வலுப்பயிற்சிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்

இரண்டாம் மாதம்

- ஒவ்வொரு வாரமும் ஓடும் தூரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தவேண்டும்
-- மாதக் கடைசிக்குள் 24 கிலோமீட்டர் ஒரே நேரத்தில் ஓடி முடிக்கும் அளவிற்குப் பயிற்சி எடுத்திருக்கவேண்டும்
-- பயிற்சி கடுமையாகும்போது உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தை உட்கொள்வது முக்கியம்

மூன்றாம் மாதம்

-- 32 கிலோமீட்டர் ஓட்டங்களை ஆரம்பிக்கவேண்டும்

நான்காம் மாதம்

-- முதல் வாரம் 32 கிலோமீட்டர் வரை ஓடிவிட்டு எஞ்சியிருக்கும் 3 வாரங்களுக்கு ஓடும் தூரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்
-- அந்தக் காலக்கட்டத்தில் போதுமான தூக்கம், சரியான உணவு, ஓய்வு ஆகியவற்றை உறுதிசெய்வது முக்கியம்.
ஆதாரம் : New York Times

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்