Skip to main content
குழந்தைகளுடன் பயணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

குழந்தைகளுடன் பயணம் - கார் இருக்கையை எடுத்துச் செல்வதா? வாடகைக்கு எடுப்பதா?

வாசிப்புநேரம் -
குழந்தைகளுடன் பயணம் - கார் இருக்கையை எடுத்துச் செல்வதா? வாடகைக்கு எடுப்பதா?

Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிறு குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பெற்றோருக்குச் சிறார் கார் இருக்கையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது இன்னும் சவாலாகவே உள்ளது.

கார் இருக்கையை உடன் எடுத்துச் செல்வதே குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

பல பெற்றோர் பயண இடத்தில் கார் இருக்கையை வாடகைக்கு எடுக்கின்றனர்.

ஆனால், அது முன்பு விபத்தில் சிக்கியதா, சரியாகப் பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், புதிய கார் இருக்கையைச் சரியாகப் பொருத்துவதிலும் சிரமம் ஏற்படலாம்.

அடிக்கடி பயணம் மேற்கொள்வோர், இலகுவான, விமானத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட கார் இருக்கையை வாங்கலாம் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

கார் இருக்கையை எளிதாக எடுத்துச் செல்ல, சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டி அல்லது தோளில் சுமக்கும் வகையிலான பைகளைப் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூரில் இருந்து பயணம் மேற்கொள்வோர் விமானத்தில் குழந்தைகளுக்கான கார் இருக்கைக்கு அனுமதி உள்ளதா என்பதை முன்கூட்டியே விமான நிறுவனத்திடம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பயணம் செல்லும் நாட்டில் குழந்தைகளுக்கான கார் இருக்கையுடன் கூடிய வாடகைக் கார்கள் அல்லது பயணப் பகிர்வுச் சேவைகள் உள்ளனவா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

கார் இருக்கை இல்லாதபோது குழந்தையை மடியில் அமர வைத்து டாக்சி அல்லது தனியார் வாகனங்களில் பயணம் செய்வது பாதுகாப்பானதல்ல என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்தகைய சூழலில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதே சிறந்த தேர்வாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆதாரம் : New York Times

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்