Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஹூவாவெய் நிறுவனத்தின் புதிய கைத்தொலைபேசி- மூன்றாக மடிக்கலாம், விலை US$2,800

வாசிப்புநேரம் -
சீனத் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவெய் (Huawei) மூன்றாக மடிக்கக்கூடிய புதிய கைத்தொலைபேசியை வெளியிட்டிருக்கிறது.

சீனாவின் ஷென்ஸென் (Shenzhen) நகரில் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கைத்தொலைபேசியின் விலை 2,800 அமெரிக்க டாலர்.

புதிய iPhoneக்குப் போட்டியாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் கைத்தொலைபேசி சந்தையில் பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று இலக்குக் கொண்டுள்ளது.

கைத்தொலைபேசிக்கு ஏற்கெனவே 3.6 மில்லியன் பேர் முன்பதிவு செய்துவிட்டனர்.

முன்பதிவுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என்று நிறுவனத்தின் இணையத்தளம் சொல்கிறது.

5 ஆண்டுகளாக அரும்பாடுபட்டுக் கைத்தொலைபேசியை உருவாக்கியதாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியீட்டு விழாவில் சொன்னார்.

Apple நிறுவனம் அதன் ஆக அண்மைய பதிப்பான iPhone 16ஐ வெளியிட்ட சில மணிநேரத்தில் ஹூவாவெய் அதன் கைத்தொலைபேசியை உலகுக்குக் காட்டியது.

இரு கைத்தொலைபேசிகளும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் விற்கப்படும்.

Apple நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் புதிய பதிப்பை வெளியிடுகிறது. ஆனால் சீனாவில் அந்த அம்சத்துக்குக் கைகொடுக்க அதற்கு ஓர் இணை நிறுவனம் இன்னமும் அமையவில்லை.

அதனால் சீன மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Apple நிறுவனம் அதைச் சரி செய்வதற்குள் சீனச் சந்தையைக் கைப்பற்ற ஹூவாவெய் திட்டமிடுகிறது.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்