இயந்திரம் தீட்டிய ஓவியம் 1.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை
வாசிப்புநேரம் -
(படம்: AP/Ai-Da Robot Studio)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஐ-டா (Ai-Da) எனும் இயந்திரக் கருவி தீட்டிய "AI God" எனும் ஓவியம் நேற்று (நவம்பர் 7) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
ஏலத்திற்கு முன் அந்த ஓவியம் சுமார் 180,000 அமெரிக்க டாலருக்கு (230,000 வெள்ளி) விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அது சாதனையளவாக 1.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (1.7 மில்லியன் வெள்ளி) விற்பனையாகியுள்ளது.
நவீன ஓவிய வரலாற்றில் தற்கால ஓவியமும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் கைகோப்பது ஒரு மைல்கல் என்று ஏலத்தை நடத்திய Sotheby's நிறுவனம் கூறியது.
ஓவியம் தீட்டப்படுவதற்கு முன் ஐ-டாவுடன் கலந்துரையாடி அதன் யோசனைகளைப் பெற்றதாக அதனை உருவாக்கிய ஐடன் மெல்லர் (Aidan Meller) சொன்னார். ஆங்கில கணித மேதை ஆலன் துரிங்கை (Alan Turing) வரைவது ஐ-டாவின் பரிந்துரையே எனவும் அவர் தெரிவித்தார்.
"ஐ-டாவின் தத்ரூபமான படைப்புகள் செயற்கை நுண்ணறிவின் எல்லையில்லா ஆற்றலைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. உலகம் மென்மேலும் செயற்கை நுண்ணறிவைப் பெரும் அளவில் பயன்படுத்த முனைப்புடன் செயல்படும்," என்றார் மெல்லர்.

தொடர்புடையது:
ஆதாரம் : AFP