'இசை மழையில் நனையத் தயாரா?' - இளையராஜா நிகழ்ச்சியில் மழை

Tiktok/navanitha_stkg
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நேற்று (5 ஏப்ரல்) நடந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் நிகழ்ச்சியில் மழை பெய்தது.
புக்கிட் ஜலில் விளையாட்டு அரங்கத்தில் உட்கூரை இல்லை.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளிகளில் விளையாட்டு அரங்கம் ஈரமாக இருந்ததைக் காணமுடிகிறது.
மேடையும் அதற்கு அருகே சிறப்புப் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்ட நாற்காலிகளும் ஈரமாயின.
ரசிகர்கள் சிலர் மழையிலிருந்து பாதுகாக்கும் சட்டையை அணிந்தவாறு நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.
'இசை மழையில் நனையத் தயாரா?' ... என்று காணொளிகளைக் கண்ட இணையவாசிகள் சிலர் வேடிக்கையாகக் கருத்துரைத்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களையும் அவர்கள் சாடினர்.
'இசை நிகழ்ச்சிகளை உட்புறத்தில் நடத்துவதே சிறப்பு'
'நிகழ்ச்சி புக்கிட் ஜலில் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் என்று அறிந்தபோதே நான் மழையை எண்ணி அஞ்சினேன்,'
என்று அவர்கள் கூறினர்.
எனினும் ரசிகர்களைப் பொறுத்தவரை இளையராஜாவின் பாடல்களைக் கேட்க மழையும் ஒரு தடையில்லை...
மழை பெய்தாலும் இளையராஜாவின் பாடல்களைக் கேட்க ஆவல் இருந்ததாக ரசிகர்கள் TikTok காணொளிகளில் பதிவிட்டனர்.
நிகழ்ச்சி தொடங்கியதற்குச் சற்று முன்னர் மழை நின்றுவிட்டதாகத் தெரிகிறது.
இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணியானாலும் முடியவில்லை என்று ரசிகர்கள் சிலர் கூறினர்.
நிகழ்ச்சி நன்றாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.