Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தண்ணீர் குடிக்கவில்லை என்றால் தடுப்பாற்றல் குறையுமா?

வாசிப்புநேரம் -

அன்புக்குரியவர்களுக்கு உடல்நலம் குன்றினால் 'ஒழுங்காகச் சாப்பிடவில்லையா? ஒழுங்காகத் தூங்கவில்லையா? போதிய தண்ணீர் குடிக்கவில்லையா?' என்று நம்மில் பலர் கேள்வி எழுப்புவதுண்டு.

தண்ணீர் குடிக்காமல் இருப்பது உண்மையில் தடுப்பாற்றலைப் பாதிக்குமா?

உடலின் தடுப்பாற்றல் செயல்முறையின் ஓர் அங்கமான lymphatic கட்டமைப்பு உடலிலுள்ள திரவங்களில் சமநிலைகாண உதவும்.

Unsplash

அந்தக் கட்டமைப்பு உடலின் வெள்ளை ரத்த அணுக்களின் போக்குவரத்துக்கும் தளமாகச் செயல்படுகிறது.

வெள்ளை ரத்த அணுக்கள் தடுப்பாற்றல் செயல்முறையில் முக்கியப் பங்காற்றுகின்றன.

lymphatic கட்டமைப்பு இயங்காதபோது நோய்த்தொற்றைத் தடுக்கவேண்டிய இடங்களுக்கு அணுக்களால் செல்லமுடியாது.

அது தடுப்பாற்றலைப் பாதிக்கக்கூடியது.

அந்தக் கண்ணோட்டத்தின்படிப் போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது தடுப்பாற்றலைப் பாதிக்கலாம். 

இருப்பினும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது ரத்த அழுத்தமும் இதயச் செயல்பாடும் முதலில் பாதிக்கப்படும். 

அதற்குப் பிறகே உடலின் தடுப்பாற்றல் செயல்முறையில் தாக்கம் தெரியக்கூடும் என்று Raffles Medical நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் டெரிக் லி (Derek Li) CNA-இடம் கூறினார்.
 
தடுப்பாற்றல் செயல்முறை இறுதியாகப் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்காகத் தண்ணீர் முக்கியமில்லை என்று எண்ணவேண்டாம்! பொதுவான சுகாதாரத்திற்குத் தண்ணீர் முக்கியம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்