Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

காலை உணவைத் தவிர்க்காதீர் - எச்சரிக்கும் ஊட்டச்சத்து நிபுணர்

வாசிப்புநேரம் -
காலை உணவை ஓர் அரசனைப் போல் உண்ண வேண்டும் என்பார்கள். காலைப் பொழுதை உற்சாகத்துடன் தொடங்க அது உதவும் என்பது நாம் அறிந்த கருத்து.

ஆனால் நம்மில் எத்தனை பேர் காலை உணவு உண்கிறோம்?

Instagram-இல் 125 பேர் பங்கேற்ற 'செய்தி'யின் கருத்தாய்வில்...
 
நீங்கள் காலை உணவு உண்பதுண்டா?

ஆம் - 59%
இல்லை - 23%
எப்போதாவது - 18%


'காலை உணவு கட்டாயம்' என்று கூறுபவர்கள் ஒரு பக்கம்...

"எனக்கு 4 பிள்ளைகள். அனைவரும் பள்ளிக்குச் செல்கின்றனர். என்னுடைய வீட்டில் காலை உணவு என்பது கட்டாயம். 'மீ ஹூன்', ராகி இட்லி, 'சீஸ் பிரெட்' முதலியவற்றைப் பிள்ளைகளுக்குத் தயார் செய்துகொடுப்பேன்"

- சுமிதா, 33 வயது

"எனக்கு இரு மகன்கள். அவர்கள் காலை உணவைத் தவறவிட்டதில்லை. இல்லாத நேரங்களில் ஏதாவது 'பிஸ்கட்' கொடுத்தனுப்புவோம். வீட்டில் 'பிஸ்கட்'டுகள் எப்போதும் கையிருப்பில் இருக்கும்"

- சார்ல்ஸ், 43 வயது

" குறிப்பாகப் பிள்ளைகளுக்கு வயிற்றுக்கோளாறுகளைத் தடுக்கவும் மயக்கம் போன்றவை ஏற்படாமல் இருக்கவும் காலை உணவைத் தவறாமல் கொடுப்பேன்"

- சவிதா, 48 வயது

கருத்தாய்வில் பங்கேற்றவர்களில் 41 விழுக்காட்டினர் காலை உணவை அறவே சாப்பிடுவதில்லை அல்லது எப்போதாவது சாப்பிடுவோம் எனக் கூறியுள்ளனர்.

'காப்பியே காலை உணவு' என்றனர் சிலர் ...

"நான் ஓர் இல்லத்தரசி. பிள்ளைகளுக்குக் காலை உணவு செய்துகொடுத்தாலும் ஒரு குவளைக் காப்பி மட்டும்தான் என்னுடைய காலை உணவு,"

- லீனா, 36 வயது

"எனக்குக் காப்பிதான் காலை உணவு. காலையில் எழுந்ததும் ஒரு குவளைக் காப்பி குடிக்கவில்லை என்றால் உலகமே ஓடாது."

- கார்த்தியாயினி, 64 வயது

'காலை உணவா? அந்தக் கேள்விக்கே இடம் இல்லை' என்று கூறுகின்றனர் மற்ற சிலர்...

"என் வீட்டில் காலை உணவு என்பது அரிது. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் முன் வழக்கமாக எதுவும் சாப்பிட மாட்டார்கள். பள்ளியில் ஓய்வுநேரத்தில் உணவு வாங்கி உண்பார்கள். அது அவர்களுக்குப் பழகிவிட்டது."

- ஏஞ்சலா, 45 வயது

"நான் வேலை செய்கிறேன். காலையில் எழுந்ததும் உணவு தயார் செய்ய நேரமில்லை. அதனால் காலை உணவைத் தவற விடுவது வழக்கமாகிவிட்டது."

- கவிதா, 28 வயது

இருப்பினும் ஒரு நாளுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தின் அளவைப் பூர்த்திசெய்யக் காலை உணவு இன்றியமையாதது என்று சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் உணவுப் புத்தாக்க, வள நிலையத்தின் மூத்த நிபுணர் கேரலின் ஸ்டீஃபன் (Carolyn Stephen) வலியுறுத்தினார்.

தூங்கி எழுந்ததும் சுமார் 12 மணி நேர விரதத்தை முடிக்கக் காலை உணவு உதவுவதாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர் சொன்னார்.

இந்நிலையில், காலை உணவைத் தவறாமல் சாப்பிடவேண்டும் என்று திருமதி கேரலின் தெரிவித்தார்.

காலை உணவைச் சாப்பிடும்போது உடலில் என்ன நடக்கும்? காலை உணவாக எதைச் சாப்பிடலாம்? காணொளியைப் பாருங்கள்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்