கொல்கத்தாவில் முதல் சிங்கப்பூர் உணவகம்

(படம்: Josephine Tan)
இந்தியாவின் கொல்கத்தா நகரில் உணவகம் நடத்துகிறார் 56 வயது சிங்கப்பூர்ப் பெண் ஜோசஃபின் டான் (Josephine Tan).
உணவகத்தின் பெயர் iDelight Cafe.
காயா டோஸ்ட் (Kaya Toast), லக்ஸா (Laksa), காப்பி (Kopi), ஹைனானிஸ் சிக்கன் ரைஸ் (Hainanese chicken rice), மீ சியாம் (mee siam) உள்ளிட்ட உணவு வகைகள் விற்கப்படுகின்றன.
டான் 2024 டிசம்பர் மாதம் உணவகத்தைத் திறந்தார். உள்ளூர்வாசிகளிடமிருந்து நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பதாகச் சொன்னார்.
சிங்கப்பூர் உணவுக் கலாசாரத்தை எடுத்துக்காட்டும் அலங்காரங்களும் உணவகத்தில் உள்ளன.
ஏன் இந்தியாவில் உணவகம்?
தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் டான் 1996இல் நேப்பாளத்துக்குச் சென்றார். 5 சமூக நிறுவனங்களைத் தொடங்கினார்.
மும்பையைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்த டான் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நேப்பாளத்திலிருந்து வெளியேறினார்.
ஓராண்டுக்குப் பிறகு டானும் அவரின் கணவரும் வீடொன்றை வர்த்தகத் தளமாக மாற்றினர்.
உணவகத்தில் பெரும்பாலும் டான் சமைக்கிறார். ஊழியர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார்.
அவரிடம் 8 பேர் வேலை செய்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மனிதக் கடத்தல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.
உணவகம் நடத்திக்கொண்டே சமூகச் சேவை செய்வதை எண்ணி மனம் மகிழ்வதாக டான் சொன்னார்.