இணையத்தில் பிரபலமான இந்தியாவின் 'YouTube கிராமம்'
வாசிப்புநேரம் -

AI image generated by DALL-E
இந்தியாவில் சிறிய கிராமம் ஒன்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் சட்டிஸ்கர் (Chhattisgarh) மாநிலத்தில் அமைந்துள்ள துல்சி (Tulsi) கிராமம் YouTubeஐ நல்வழியில் பயன்படுத்தித் தங்களது கதைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதோடு நிறுத்திவிடாமல் தங்களது திறமைகளையும் வெளிப்படுத்துகிறது.
அது இந்தியாவின் 'YouTube கிராமம்' என்றழைக்கப்படுகிறது.
இளம் பிள்ளை முதல் பெரியவர் வரை...பலர்
YouTube காணொளிகளில் இடம்பெறுகின்றனர்.
துல்சி கிராமத்தில் சுமார் 4,000 பேர் குடியிருக்கின்றனர்.
அவர்களில் 1,000க்கும் மேற்பட்டோர் YouTube காணொளிகளுக்குப் பங்களிக்கின்றனர்.
YouTube காணொளிகளின் மூலம் கிராமம் பலனடைந்திருப்பதாகப் பல கிராமவாசிகள் கருதுகின்றனர்.
சமூக மாற்றங்கள் ஏற்படுவதற்கும் காணொளிகள் துணைபுரிவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாகப் பல பெண் கிராமவாசிகள்
சம்பாதிப்பதற்கு YouTube காணொளிகள் வழியமைத்துக் கொடுத்திருக்கின்றன.
2018ஆம் ஆண்டில் தொடங்கிய 'Being Chhattisgarhiya' எனும் YouTube பக்கத்தில் இதுவரை 125,000க்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
அந்தப் பக்கத்தில் பகிரப்பட்ட காணொளிகள் 260 மில்லியன் முறைக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : Others