Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

இந்திய மாம்பழங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவில் கோடைக்காலம் வந்துவிட்டால் மாம்பழங்களுக்குப் பஞ்சமிருக்காது.

சுண்டியிழுக்கும் வாசத்துடன் பல ரகங்களில் பல்வேறு சுவைகளில் கிடைக்கும் இந்திய மாம்பழங்களுக்கு உலகச் சந்தைகளில் நாளுக்கு நாள் தேவை கூடிக்கொண்டே போகின்றது.

கோடைக்காலத்தில் அனைத்துலகச் சந்தைகளில் இந்திய மாம்பழங்கள் குவிந்துவிடுகின்றன.

அதன் வரிசையில் இணைகிறது சிங்கப்பூர்.

இந்திய மாம்பழங்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் 9ஆவது இடத்தில் இருப்பதாக CNBC TV18 கூறுகிறது.

2022ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை 351.76 மில்லியன் டன் எடையுள்ள மாம்பழங்கள் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக அது சொன்னது.

வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 75 விழுக்காட்டு மாம்பழங்கள் இந்தியாவின் மேற்கு மாநிலங்களைச் சேர்ந்தவை.

ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், குஜராத், தமிழ்நாடு ஆகியவற்றில் மாம்பழங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன; மகராஷ்டிரா, குஜராத் ஆகிய 2 மாநிலங்களிலிருந்து அவை அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதாக New Indian Express செய்தி கூறுகிறது.

அமெரிக்காவுக்கான மாம்பழ ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது. 2024 நிதியாண்டில் மாம்பழங்களின் ஏற்றுமதி 130 விழுக்காடு அதிகரித்து 10 மில்லியன் டாலராகப் பதிவானது. 2022-23 ஆண்டுகளில் அது 4.36 மில்லியன் டாலராக இருந்ததாக Times of India இணையத்தளம் கூறுகிறது.

2023-24 ஆண்டுகளில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 5 மாதங்களில் இந்தியா 47.98 மில்லியன் டாலர் மதிப்பிலான மாம்பழங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

மிகப் பிரபலமான இந்திய மாம்பழம்?

இந்தியாவில் பழங்களின் ராஜா என்று மாம்பழம் வருணிக்கப்படுகிறது. அதில் மொத்தம் 1,500 வகைகள் உள்ளன.

அவை பல்வேறு வடிவங்களில், வண்ணங்களில், சுவைகளில் கிடைக்கின்றன.

சட்னி, ஊறுகாய் தொடங்கி பழச்சாறுகள் வரை பல்வகை உணவுகளைத் தயாரிக்க மாம்பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அல்போன்சோ (Alphonso), தஷேரி (Dasheri) ஆகியவை மிகப் பிரபலமான மாம்பழங்கள்.

இந்தியா தவிர்த்து தாய்லந்து, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர் மாம்பழங்களை இறக்குமதி செய்கிறது.
ஆதாரம் : Others/CNBC

மேலும் செய்திகள் கட்டுரைகள்