இந்தியாவின் மசாலா ஆம்லெட்டுக்கு அங்கீகாரம்
வாசிப்புநேரம் -

(படம்: envato.com)
காலை உணவு முதல் இனிப்புப் பலகாரம் வரை முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு வகைகள் பலவிதம்.
உலகில் முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் முதல் 100 உணவு வகைகளைப் பட்டியலிட்டது TasteAtlas எனும் உணவு, சுற்றுலா வழிகாட்டி இணையத்தளம்.
பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது ஜப்பானில் தயாரிக்கப்படும் Ajitsuke tamago என்ற முட்டை உணவு.
2ஆவது இடத்திலிருப்பது Tortang talong என்ற பிலிப்பீன்ஸ் நாட்டு உணவு.
மூன்றாவது இடத்தில் கிரீஸின் Staka me ayga என்ற உணவு இருப்பதாக NDTV Food இணையத்தளம் கூறுகிறது.
முதல் 50 உணவு வகைகள் வரிசையில் இந்தியாவின் மசாலா ஆம்லெட்டும் இடம்பெற்றுள்ளது.
அதற்கு 22ஆவது இடம் கிடைத்துள்ளது.
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவை கலந்து சமைக்கப்படும் மசாலா ஆம்லெட் வீதிக்கடைகள் தொடங்கி பெரிய உணவகங்கள் வரை பரிமாறப்படுகின்றன.

ஆதாரம் : Others