Skip to main content
'என் அப்பாவுக்கு அறிவுரை செய்யுங்கள்!'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

'என் அப்பாவுக்கு அறிவுரை செய்யுங்கள்!' - ஆடவரின் கோரிக்கையைக் கேட்ட இந்தியப் பிரதமர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அப்பா சர்க்கரை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்பது மகனின் ஆசை...

எப்படிச் சொன்னால் அப்பா கேட்பார் என்று எண்ணினார்.

அதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடினார்!

Instagramஇல் காணொளி ஒன்றைப் பதிவுசெய்த யுவ்ராஜ் துவா (Yuvraj Dua) தம்முடைய அப்பாவுக்கு அறிவுறுத்தும்படி திரு மோடியிடம் கேட்கிறார்.

காணொளி பரவலாகப் பகிரப்பட்டது.

திரு மோடியின் கவனத்துக்கும் அது வந்தது.

காணொளியைத் தமது கணக்கில் பகிர்ந்துகொண்ட திரு மோடி, யுவ்ராஜின் கோரிக்கையை நிறைவேற்றினார்.

" யுவ்ராஜின் கோரிக்கையின்படி நான் அவருடைய அப்பாவையும் மற்றவர்களையும் சர்க்கரையைக் குறைவாக உட்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் பதிவிட்டார்.

திரு மோடி அவ்வாறு செய்ததைக் கவனித்த இணையவாசிகள் அவர்களின் ஆச்சரியத்தைப் பதிவுசெய்தனர்.

"திரு மோடியே உங்களுடைய காணொளியைப் பகிர்ந்துள்ளார். உங்களுடைய அப்பா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்," என்று அவர்கள் கூறினர்.

ஆதாரம் : Others/NDTV

மேலும் செய்திகள் கட்டுரைகள்