Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

தன்னைப் போன்ற உடற்குறையுள்ளோருக்கு வேலைவாய்ப்பளிக்கும் இளம்பெண்

வாசிப்புநேரம் -
தன்னைப் போன்ற உடற்குறையுள்ளோருக்கு வேலைவாய்ப்பளிக்கும் இளம்பெண்
வெளியீடு : 11 Jan 2026 08:30AM புதுப்பிப்பு : 11 Jan 2026 11:47AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவில் உடற்குறையுள்ள ஒரு பெண்ணின் பயணம் இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது.

அவர் 30 வயது வெங் சின் யி (Weng Xinyi). ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் அவர் ஒரு கையையும் காலையும் இழந்தார். அவருக்கு மூன்றுமுறை மாரடைப்பு ஏற்பட்டது; அவர் 14 அறுவைச் சிகிச்சைகளை எதிர்நோக்கினார்.

வெங்கின் காதலர் அவரைக் கைவிட்டார். விபத்துக்குக் காரணமாக இருந்த நண்பரும் சிகிச்சைகளுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்தினார்.

தன் உண்மை நிலைமையை ஏற்றுக்கொள்ள அவருக்கு ஓராண்டு தேவைப்பட்டதாக South China Morning Post சொன்னது.

உடற்குறை ஏற்பட்டாலும் அவர் என்றும் உறுதியோடு இருக்கும் அதே பெண்தான் என்று உலகத்திற்கு நிரூபிக்க அயராது உழைத்தார்.

2022இல் அவர் வர்த்தகத்தில் இறங்கினார். ஓராண்டுக்குப் பிறகு அவர் காலணிகளைச் சுத்தம் செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கினார்.

உடற்குறையுள்ள சிலரை வேலைக்கு எடுத்து அவர்களால் செய்ய முடிந்த வேலைகளை அவர்களுக்கு ஒதுக்கினார். தொழிற்சாலையில் ஒவ்வொரு நாளும் 700 முதல் 800 காலணிகள் வரை சுத்தம் செய்யப்படுகின்றன. அதன்மூலம் தொழிற்சாலை மாதத்திற்கு 300,000 யுவான் (சுமார் 55,000 வெள்ளி) வருவாய் ஈட்டுகிறது.

வெங்கின் துணிச்சலை இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்