Skip to main content
முதலீடு கலந்த காப்புறுதித் திட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

முதலீடு கலந்த காப்புறுதித் திட்டம் - விவரம் தெரியுமா?

வாசிப்புநேரம் -
முதலீடு கலந்த காப்புறுதித் திட்டம் - விவரம் தெரியுமா?

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

முதலீட்டுடன் இணைந்த காப்புறுதித் திட்டங்களில் (Investment-Linked Policies - ILP) நீங்கள் செலுத்தும் பணம் முழுவதும் முதலீடு செய்யப்படுவதில்லை.

இத்தகைய இணைந்த திட்டங்களின் எண்ணிக்கை கடந்த மூவாண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது. அவை முழுமையாக, தெளிவாக விவரம் அளிப்பதில்லை என்ற புகார்களும் அதிகரித்துள்ளன.

அதனால் அத்தகைய திட்டங்களை வாங்குவதற்கு முன் கட்டண விவரங்களைத் தெரிந்துகொள்வது முக்கியம் என்று MoneySense இணையத்தளம் விளக்குகிறது.

காப்புறுதிக்கான கட்டணம், முதலீட்டு நிதியை நிர்வகிக்கும் கட்டணம், நிர்வாகச் செலவு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உண்டு.

என்னென்ன கட்டணங்கள் விதிக்கப்படலாம்?

💰வயது, பாலினம், புகைப்பிடிக்கும் பழக்கம் போன்றவற்றைப் பொறுத்து காப்புறுதிக் கட்டணம் மாறுபடும்.

💰வயது அதிகரிக்கும்போது அந்தக் கட்டணமும் பொதுவாக உயரும்.

💰முதலீட்டு நிதியை நிர்வகிப்பதற்கும் காப்புறுதித் திட்டத்தை நிர்வகிப்பதற்கும் தனித்தனியாகக் கட்டணங்கள் விதிக்கப்படலாம்.

💰குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே திட்டத்தை முழுமையாகவோ பகுதியாகவோ முடித்துக்கொண்டால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.

1,000 வெள்ளி செலுத்தினால் எவ்வளவு முதலீடு செய்யப்படும்?

அது காப்புறுதித் திட்டத்தைப் பொறுத்தது.

உதாரணமாக, முதலீட்டுக்கு ஒதுக்கப்படும் விகிதம் 20 விழுக்காடாக இருந்தால், 1,000 வெள்ளியில் 200 வெள்ளி மட்டுமே முதலீடு செய்யப்படும்.

சில திட்டங்களில் தொடக்க ஆண்டுகளில் அதிகமான கட்டணம் காப்புறுதிக்காகப் பிடித்துக் கொள்ளப்படும்.

மற்ற சில திட்டங்களில் முழுத் தொகையும் ஆரம்பத்தில் முதலீடு செய்யப்பட்டாலும், முன்கூட்டியே திட்டத்தை முடித்துக்கொள்ளும்போது கட்டணம் விதிக்கப்படலாம்.

முதலீடுகளை வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் இடையே பொதுவாக 5 விழுக்காடு வித்தியாசமும் இருக்கலாம்.

கட்டணங்கள் காலப்போக்கில் மாறலாம்.

எனவே காப்புறுதித் திட்டத்தை வாங்குவதற்கு முன் அதன் கட்டணங்களையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படிக்குமாறு MoneySense அறிவுறுத்துகிறது.

காப்புறுதியோடு முதலீடு சேரும் திட்டங்கள், முதலீடு திட்டங்கள் அல்ல காப்புறுதித் திட்டங்கள் என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியம்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்